சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து விடை பெற்றார் டிம் செளதி!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து வீரர் டிம் சௌதி இருந்து வெற்றியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஹாமில்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் 423 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டிகள் கொண்ட தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இதுவாகும்.
இந்த நிலையில், இப்போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாக டிம் சவுதி முன்னதாக அறிவித்திருந்த நிலையில், இன்று நடைபெற்ற 3வது டெஸ்டில் 423 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இதன் மூலம் வெற்றியுடன் ஒய்வு பெறுகிறார், அவரை கனத்த இதைத்துடன் நியூசிலாந்து அணி வழி அனுப்பி வைக்கிறது. ஆனால், நியூசிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால் அதில் சௌதி பங்கேற்பார் எனத் தெரிவித்துள்ளார்.
35 வயதான நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதி, 2008-ல் இங்கிலாந்துக்கு எதிராக தனது டெஸ்ட் கிரிக்கெட் தொடரரில் அறிமுகமானதில் இருந்து 107 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதுவரை 104 டெஸ்ட் போட்டிகளில் 385 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
மேலும், 7 அரைசதங்கள் உட்பட 2,243 ரன்கள் எடுத்துள்ள அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 98 சிக்ஸர்களை அடித்துள்ளார். டெஸ்ட் போட்டியில் இருந்து அவர் ஓய்வு பெற்ற நிலையில், டி20 ஒரு நாள் போட்டியில் விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.