தங்கம் விலை ரூ.80 உயர்வு… ஒரு சவரன் எவ்வளவு?
24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ 7,799-க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.62,392-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: கடந்த சில நாட்களாக உச்சம் கண்டு வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று வரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது.
நேற்றைய தினம் ரூ.57,120க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் தங்கம், இன்று ரூ.57,200க்கு விற்கப்படுகிறது. மேலும், நேற்று ரூ.7,140ஆக இருந்த ஒரு கிராம் தங்கத்தின் விலை இன்று ரூ.10 உயர்ந்து ரூ.7,150ஆக உள்ளது.
அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ 7,799-க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.62,392-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், கடந்த நான்கு நாட்களாக எந்தவித மாற்றமும் இல்லாமல், கிராமுக்கு ரூ.100க்கும், கிலோ வெள்ளி ரூ.100,000-க்கும் விற்பனையாகிறது.