ஆயிரத்தி 500 கோடியை நெருங்கும் புஷ்பா 2! ஓடிடி ரிலீஸ் தேதி தெரியுமா?
புஷ்பா 2 திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9, 2025 அன்று நெட்ஃபிக்ஸ் இல் பல மொழிகளில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை :புஷ்பானா ப்ளவருனு நினைச்சியா இல்லை வசூல் மழை என்கிற அளவுக்கு புஷ்பா 2 படம் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம் எடுக்கப்பட்டது என்னவோ 400 கோடிக்கு தான் ஆனால், 1200 கோடிகள் வசூல் செய்து தயாரிப்பாளர்களுக்கு பெரிய லாபத்தை கொடுத்துள்ளது. வெளியான 2 நாட்களிலே படத்தின் பட்ஜெட்டுக்காக செலவு செய்த தொகையையும் மீட்டுக்கொடுத்துவிட்டது.
இந்நிலையில், படத்தின் வசூல் குறையும் வாய்ப்பு இல்லை என்பதை போல வசூலை வாரி குவித்து வருகிறது. குறிப்பாக படம் வெளியான 11 நாட்களில் உலகம் முழுவதும் 1409 கோடி வசூல் செய்திருந்ததாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அறிவித்து இருந்தது. இன்னும் சில தினங்களில் படம் 1500 கோடி வசூலையும் கடந்துவிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், படம் எப்போது எந்த ஓடிடியில் வெளியாகும் என்பதற்கான விவரம் பற்றிய தகவல் தற்போது வெளியாகிள்ளது. அதன்படி, புஷ்பா 2 படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி கன்னடம் என பல மொழிகளில் படத்தை வெளியிட படத்தின் ஓடிடி உரிமையை பெற்ற நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இன்னும் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இருப்பினும் நம்மபதக்க சினிமா வட்டாரத்தில் இருந்த கிடைத்த தகவலின் படி, படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஓடிடியில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஜனவரி மாதம் வெளியாகுமா அல்லது இந்த மாதம் இறுதியில் வெளியாகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.