கொங்கு நாட்டு ஸ்பெஷல் பள்ளிபாளையம் சிக்கன் செய்வது எப்படி?
பள்ளிபாளையம் சிக்கன் செய்முறை ரகசியங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
சென்னை –பள்ளிபாளையம் சிக்கன் செய்முறை ரகசியங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
தேவையான பொருள்கள்;
- சிக்கன் =அரை கிலோ
- நல்லெண்ணெய் =5 ஸ்பூன்
- கடுகு= அரை ஸ்பூன்
- இஞ்சி= ஒரு துண்டு
- பூண்டு= எட்டு பள்ளு
- காய்ந்த மிளகாய்= 12
- தேங்காய்= நறுக்கியது அரை கப்
- சின்ன வெங்காயம் =250 கிராம்.
செய்முறை;
அரை கிலோ சிக்கனை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும் .ஒரு கடாயில் 5 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். பிறகு சின்ன வெங்காயத்தை நறுக்கி சேர்த்து வதக்கவும். அதன் பிறகு காய்ந்த மிளகாயையும் சேர்த்து வதக்கி இஞ்சி மற்றும் பூண்டை தட்டி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறி எடுத்து வைத்துள்ள சிக்கனையும் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும் .
இப்போது தேவையான அளவு உப்பு ,பொடியாக நறுக்கிய தேங்காய் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள் வேக வைத்துக் கொள்ளவும்.பிறகு பத்து நிமிடம் கழித்து மிதமான தீயில் ஏழு நிமிடங்கள் நன்கு வறுக்க வேண்டும் . இப்போது அதில் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான பள்ளிபாளையம் சிக்கன் தயாராகிவிடும்.