புதுச்சேரி அரசு சொத்தை விலை பேசினேனா? ‘உண்மை இதுதான்’ மவுனம் களைத்த விக்னேஷ் சிவன்!
அரசு சொத்தை விலைக்கு கேட்டதாக வெளியான தகவலுக்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை: இயக்குநர் விக்னேஷ் தற்போது ‘லவ் இன்சூரன்ஸ்’ நிறுவனம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், கிருத்தி ஷெட்டி ஜோடியாக நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விக்னேஷ் சிவன் அரசு ஹோட்டலை விலைக்கு கேட்டதாக சர்ச்சை எழுந்தது. மேலும் இது தொடர்பாக நெட்டிசன்கள் மீம்ஸ் போடு கலாய்த்து வந்தனர்.
தற்பொழுது அதற்கு விளக்கம் அளித்துள்ளார். அதாவது, புதுச்சேரியில் சொத்து வாங்கப் போவதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என்றும் அது உண்மையானது இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார். தனது படத்தின் படப்பிடிப்புக்காக அனுமதி கேட்க புதுச்சேரிக்கு சென்றேன், ஆனால் சமூக ஊடகங்கள் அதை வேறு விதமாக பரப்பி வருகின்றது என்று அவர் தெளிவுபடுத்தினார்.
இது குறித்து விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பதிவில், “புதுச்சேரி விமான நிலையத்தை பார்வையிட்டு அங்கு ‘LIK’ படத்தின் படப்பிடிப்பை நடத்துவதற்கு அனுமதி கேட்கவே புதுச்சேரிக்கு சென்றேன். அப்போது மரியாதை நிமித்தமாக முதலமைச்சரையும், சுற்றுலாத்துறை அமைச்சரையும் சந்தித்தேன்.
என்னுடன் வந்த உள்ளூர் மேனேஜர் ஒருவர், அவருக்கு தேவைப்பட்ட விஷயம் தொடர்பாக அப்போது விசாரித்தார். இந்த நிகழ்வு தவறுதலாக என்னுடன் தொடர்புப்படுத்தி பேசப்பட்டு வருகிறது. இதுதொடர்பான மீம்ஸ் நகைச்சுவையாக இருக்கிறது. அது எனக்கு உத்வேகமும் அளிக்கிறது. ஆனால், அவையெல்லாம் தேவையற்றது. அதனால் இந்த தகவலை தெளிவுப்படுத்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.