சென்னை வந்த குகேஷ்! உலக சாம்பியனுக்கு உற்சாக வரவேற்பு!

உலக செஸ் சாம்பியன் குகேஷை சென்னை விமான நிலையத்தில் இருந்து அவருடைய வீட்டிற்கு அழைத்து செல்ல மக்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.

Gukesh

சென்னை : உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024க்கான போட்டிகள் சிங்கப்பூரில் நடைபெற்ற நிலையில், அதில் கலந்து கொண்ட தமிழக வீரர்  குகேஷ் சீன கிராண்ட் மாஸ்டர் டிங் லின்னை வீழ்த்தி வெற்றிபெற்றார். பரபரப்பாக சென்ற 14-வது சுற்றில்  தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி குகேஷ் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற இளம் வீரர் என்கிற சாதனையைப் படைத்தார்.

இதனையடுத்து, அவருக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். வாழ்த்து மழையில் இருந்த குகேஷிற்கு பரிசுத்தொகையாக ரூ.5 கோடி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதைப்போல, சர்வதேச செஸ் சம்மேளனம் ரூ.11.45 கோடி வழங்குகிறது எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், உலகசெஸ் பட்டம் வென்ற குகேஷ் இன்று சிங்கப்பூரில் இருந்து சென்னையில் உள்ள அவருடைய இல்லத்திற்கு வருகை தரவிருக்கிறார். சென்னை விமான நிலையத்தில் இருந்து அவருடைய வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக தமிழ்நாடு அரசால் அவருடைய புகைப்படம் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்ற கார் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டது.

அவருடைய வருகையை எதிர்பார்த்து சென்னை விமான நிலையத்தில் மக்கள் பலரும் ஆதரவு கொடுப்பதற்காக காத்திருந்தார்கள். அவர் வந்தவுடன் பூக்கள் தூவி அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். வந்தவுடன் மக்களுக்கு கைகளை காட்டினார். அத்துடன் ராணுவ வீரர்களும் அவருக்கு பாதுகாப்பாக பின்பு வந்தனர். பின் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனம் மூலம் குகேஷ் வீட்டிற்கு சென்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்