விதிகளை மீறிய ஷாகிப் அல் ஹசன்! அதிரடியாக சஸ்பெண்ட் செய்த இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம்!
உள்நாட்டு மற்றும் சர்வதேச அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் பந்துவீச ஷாகிப் அல் ஹசனுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வங்கதேசம் : கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெஸ்ட் மற்றும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இந்த சூழலில், ரசிகர்கள் மற்றும் அவரும் வங்கதேசம் தென்னாப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் விளையாடிவிட்டு சென்றால் நன்றாக இருக்கும். ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக அந்த போட்டியில் விளையாடி கொள்கிறேன் என ஷாகிப் அல் ஹசன் கோரிக்கையும் வைத்திருந்தார்.
ஆனால், வங்கதேசத்தில் இப்போது அரசியல் போராட்டங்கள் நடந்து வருவதால், தற்போது நாடு கூட திரும்ப முடியாத சூழ்நிலையும் நிலவி கொண்டு இருக்கிறது. எனவே, ஷாகிப் அல் ஹசன் கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதனையடுத்து, உள்ளூர் போட்டிகளிலாவது விளையாடுவோம் என முடிவெடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் நடந்தும் உள்ளூர் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வந்தார்.
இந்த போட்டிகளில் பந்து வீசும் முறை விதிகளுக்கு மீறியதாக இருப்பதாக ஷகிபுல் ஹசன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை செய்து அதற்கான சோதனையில் இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் ஈடுபட்ட நிலையில், உண்மையில் பந்து வீசியதில் ஷாகிப் அல் ஹசன் விதிகளை மீறியது தெரியவந்தது. இதனையடுத்து, அதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசன் பவுலிங் செய்வதிலிருந்து இடைநீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இனிமேல், ஐசிசி- ஆல் அங்கீகரிக்கப்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் அவருக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.