இந்தியானாலே ரொம்ப பிரியம்! வெளுத்தெறிந்து புது சாதனை படைத்த ஸ்டிவ் ஸ்மித்!
இந்தியாவுக்கு எதிராக குறைந்த இன்னிங்ஸில் அதிக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை ஆஸ்ரேலியா வீரர் ஸ்டிவ் ஸ்மித் படைத்துள்ளார்.
பிரிஸ்பேன் : இந்தியா என்றாலே மிகவும் பிடிக்கும் என்கிற வகையில் ஸ்டிவ் ஸ்மித் புதிய சத்தான ஒன்றை படைத்துள்ளார். அது என்ன சாதனை என்றால் அணைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக அதிக சதங்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை தான். இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் ட்ராபி தொடரின் 3-வது போட்டியில் சதம் விளாசியதன் மூலம் இந்த சாதனையை ஸ்மித் படைத்துள்ளார்.
இதற்கு முன்பு ஆஸ்ரேலியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங் இந்தியாவுக்கு எதிராக அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் சேர்த்து மொத்தமாக 14 சதங்கள் விளாசி இருந்தார். அது தான் இந்தியாவிற்கு எதிராக அதிகம் சதம் விளாசிய சாதனையாகவும் இருந்தது. அந்த சாதனையை தற்போது முறியடித்து ஸ்மித் புது சாதனையை படைத்துள்ளார்.
அது மட்டுமின்றி, இந்தியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் ட்ராபி தொடரின் 3ஆவது டெஸ்டில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித், 101 ரன்கள் அடித்தார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக குறைந்த இன்னிங்ஸில் அதிக சதம் அடித்தவர் என்ற சாதனையை அவர் படைத்திருக்கிறார். 41 இன்னிங்ஸில் 10 சதங்களை ஸ்டீவன் ஸ்மித் அடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக 55 இன்னிங்ஸில் 10 சதங்களை அடித்த இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் உள்ளார்.
அதைப்போல, இந்த போட்டியில் ஸ்மித் சத்தம் விளாசியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய 33-வது சதத்தை பூர்த்தி செய்தார், இதன் மூலம் ஆஸ்ரேலியா அணிக்காக அதிகம் சதம் விளாசிய இரண்டாவது வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார். முன்னதாக 32 சதங்களுடன் ஸ்டீவ் வாக்கை அவர் கடந்தார்.
முதலிடத்தில் டெஸ்ட் போட்டிகளில் 41 சதங்கள் விளாசி ரிக்கி பாண்டிங் இருக்கிறார். இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 33 சதங்களை அடித்துள்ள ஸ்டீவன் ஸ்மித், அதிகபட்சமாக இங்கிலாந்துக்கு எதிராக 12 சதங்கள் அடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.