மட்டன் பிரியானி..தம்ரூட் அல்வா..சுட சுட தயாராகும் சாப்பாடு! அதிமுக பொதுக்குழு மெனு லிஸ்ட்!

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு சுட சுட மதிய உணவு தயார் செய்யப்பட்டு வருகிறது.

edappadi palanisamy

சென்னை : அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10 மணி அளவில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் சென்னை வானகரத்தில்  அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வந்தவுடன் தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்டவுடன் பல தீர்மானம் நிறைவேற்றமும் செய்யப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் 3,500  அதிமுக நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளதாகவும், மேலும் சிலர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மொத்தமாக 8,000 பேருக்கு மதிய உணவு தயார் செய்யப்பட்டு வருகிறது.  750 பேருக்கு மேல் சைவ உணவும், 6000 பேருக்கு அசைவு உணவும் வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. என்னென்ன உணவுகள் வழங்கப்படவுள்ளது என்பதற்கான விவரம் பற்றிய தகவலும் வெளியாகியுள்ளது. அதன்படி பின் வருவமாறு …

750 பேருக்கு சைவ உணவு – மெனு

தம்ரூட் அல்வா, பருப்பு வடை, அப்பளம்,, ஊறுகாய், மோர் மிளகாய், சாம்பார், வத்தக் குழம்பு, தக்காளி ரசம், முட்டைகோஸ் + பீன்ஸ் பொறியல், புடலங்காய் கூட்டு, வெஜ் பிரியாணி, தயிர் பச்சடி, வெள்ளை சாதம், உருளைக்கிழங்கு பொறியல், தயிர், பருப்பு பாயாசம் ஆகிய உணவுகள் தயார் செய்யப்பட்டுள்ளது.

6000 பேருக்கு அசைவம்

அதைப்போல சைவ உணவை பொறுத்தவரையில் மட்டன் பிரியானி, சிக்கன் 65, மீன் வறுவல், முட்டை மசாலா, வெள்ளை சாதம், ரசம், தயிறு ஆகிய உணவுகள் தயார் செய்யப்பட்டுள்ளது. பொதுக்குழு கூட்டம் நடைபெற்று முடிந்த பிறகு கலந்து கொண்ட அனைவருக்கும் மத்திய உணவு வழங்கப்படவிருக்கிறது.

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்திற்கு வருபவர்கள் யாரும் பசியுடன் செல்லக் கூடாது அனைவரும் இருந்து உணவு சாப்பிட்டு விட்டு தான் செல்லவேண்டும் எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்திற்கு வந்தபோது தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்