Live : வானிலை நிலவரம் முதல் அதிமுக பொதுக்குழு கூட்டம் வரை!
கனமழை நிலவரம் முதல் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுவது வரை இன்றயை முக்கிய செய்திகள் கீழே விவரமாக கொடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 24-மணி நேரத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று மேற்கு – வட மேற்கு திசையில் தமிழ்நாடு கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.
சென்னை வானகரத்தில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது. அதைப்போல, 2026 தேர்தலில் ஆட்சியமைப்பதற்கான வியூகங்கள் தொடர்பான முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்பு.
டிசம்பர் 17-ஆம் தேதி நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவையில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025