உலக அளவில் ஜனநாயகத்தின் தாயாக இந்தியா திகழ்கிறது – பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

நமது அரசமைப்பு நம்மை 75 ஆண்டுகள் வழிகாட்டி முன்னேற்ற பாதையில் அழைத்து வந்துள்ளது என பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Narendra Modi

டெல்லி : மக்களவையில் அரசியலமைப்புச் சட்ட விவாதத்தின் இரண்டாவது மற்றும் கடைசி நாளுக்காக இன்று விவாதம் நடைபெற்ற நிலையில், அதில் பேசிய பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் இந்தியாவை பற்றி பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” உலகெங்கிலும் உள்ள அனைத்து ஜனநாயகத்தை நேசிக்கும் குடிமக்களுக்கும் இது மிகவும் பெருமையான தருணம்.  இந்த 75 ஆண்டுகால சாதனை சாதாரணமானது அல்ல, நம்மளுடைய நாடு சுதந்திரம் அடைந்த நேரத்தில் இந்தியாவிற்கு வெளிப்படுத்தப்பட்ட சாத்தியக்கூறுகளை முறியடித்து.

இந்திய அரசியலமைப்பு தான் நம்மை இங்கு கொண்டு வந்துள்ளது. இந்த தருணத்தில்  இந்திய மக்களின் முன் நான் மரியாதையுடன் தலைவணங்க விரும்புகிறேன் . இந்திய குடிமக்கள் தான் எல்லாப் புகழுக்கும் உரியவர்கள்.  அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்களை நினைவுகூறும் தருணம் இது.

உலக அளவில் ஜனநாயகத்தின் தாயாக இந்தியா உள்ளது.  100-ம் ஆண்டு சுதந்திர தின விழாவின்போது இந்தியா வளர்ந்த நாடாக உருவெடுத்து இருக்கும் அரசியலமைப்பில் பெண்களுக்கு முதலில் அதிகாரம் வழங்கியது இந்தியா தான். இந்தியாவில் தான் சுதந்திரம் பெற்ற உடனேயே பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. அதைப்போல,  இன்று மத்திய அரசு கொண்டுவரும் அனைத்து திட்டங்களின் மையமாக பெண்கள் உள்ளனர்.

இப்போது சகாப்தம் மாறிவிட்டது. டிஜிட்டல் துறையில் உள்ளது மற்றும் இல்லாத சூழ்நிலையை நாங்கள் விரும்பவில்லை. அதனால்தான் டிஜிட்டல் இந்தியாவின் வெற்றிக் கதைக்கு தொழில்நுட்பத்தை ஜனநாயகப்படுத்த முயற்சித்ததே காரணம் என்று பெருமையுடன் கூறுகிறோம்” எனவும் பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்