“குப்பையை கண்டால் பொறுத்துக் கொள்ள முடியாது” குப்பைக்கெதிராக ஆவேசமடைந்த தமிழிசை”..!!
சென்னை அருகே பள்ளி மாணவர்களோடு சேர்ந்து, பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தூய்மை பணிகளை மேற்கொண்டார்.
சென்னை நெசப்பாக்கத்தில் தனியார் பள்ளி மாணவர்கள், தூய்மை இந்தியா திட்டத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில் பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தராஜன் கலந்துக் கொண்டு தெருக்களில் இருந்த குப்பைகளை அகற்றி, தூய்மை பணிகளை மேற்கொண்டார்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் 15 முதல் 2 ம் தேதி வரை தீவிரமாக சுத்தப்பணியில் ஈடுபட உள்ளதாகவும், சுத்தம் செய்வதின் மூலம் 60 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஊழலை கண்டால் எப்படி பொறுத்துக்கொள்ள முடியாதோ, அதே போல குப்பையை கண்டாலும் பொறுத்துக்கொள்ள முடியாது என தெரிவித்தார்.தமிழிசையின் இந்த கருத்தை சமூக வலைதளத்தின் மீம்ஸ் போட்டு பகிர்ந்து வருகிறார்கள்..
DINASUVADU