இளங்கோவன் மறைவு – தவெக தலைவர் விஜய் முதல் உதயநிதி வரை இரங்கல்!

இளங்கோவன் மறைவுக்கு தவெக தலைவர் விஜய், துணை முதலமைச்சர் உதயநிதி, ராகுல் காந்திமற்றும் மல்லிகார்ஜுன கார்கே அகியோடரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

EVKS - Vijay - udhay

சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார். சென்னை தனியார் மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கு மேலாக செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.

இந்த நிலையில், அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் ஸ்டலின்,  செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். தற்பொழுது, தவெக தலைவர் விஜய், துணை முதலமைச்சர் உதயநிதி, ராகுல் காந்திமற்றும் மல்லிகார்ஜுன கார்கே அகியோடரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

விஜய்

தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், “மிகப்பெரிய அரசியல் பாரம்பரியத்தைக் கொண்டவரும், தற்போதைய ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

உதயநிதி

துணை முதலமைச்சர் உதயநிதி தனது எக்ஸ் பக்கத்தில், “காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவர் – ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக மக்கள் பணியாற்றிய அண்ணன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து வருந்துகிறோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தார் – நண்பர்கள் – காங்கிரஸ் தொண்டர்கள் அனைவருக்கும் என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ராகுல் காந்தி

எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி, “காங்கிரஸ் கட்சியின் கொள்கையை, அச்சமின்றி பரப்பும் ஒப்பற்ற தலைவர் இளங்கோவன். பெரியாரின் சிந்தனையை சீரிய முறையில் எடுத்துச் சென்றவர். தமிழ்நாட்டிற்கு அவரது அர்ப்பணிப்பு சேவை என்றென்றும் உத்வேகமாக இருக்கும். முன்னாள் மத்திய அமைச்சரும், டிஎன்பிசிசி முன்னாள் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு வருத்தம் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மல்லிகார்ஜுன கார்கே

காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில், ” ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் மறைந்த செய்தி ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது ஈவிகேஎஸ் இளங்கோவன் தமிழக மக்களின் நலனுக்காக பாடுபட்டவர். காங்கிரஸ் மற்றும் பெரியாரின் கொள்கைகளுக்காக வாழ்நாளை கொள்கைகளுக்காக அர்ப்பணித்தவர். ஒரு நேர்மையான மற்றும் தைரியமான தலைவர், ஒருமித்த கருத்தை உருவாக்குபவர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இரங்கல் செய்தி குறிப்பில்,  “இ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் உடல் நலக்குறைவால் இன்று (14.12.2024) இயற்கை எய்தினார் என்ற செய்தியை கேட்டு மன வேதனை அடைந்தேன். கேப்டன் அவர்களுக்கு நல்ல நண்பர், பழகுவதற்கு இனிமையானவர். இவருடைய இழப்பு அவரது குடும்பத்தாருக்கும், தமிழக காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கும் பேரிழப்பாகும். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்