Live: எங்கெல்லாம் மழை… இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!
இன்றைய வானிலை நிலவரம், பள்ளிகளுக்கு விடுமுறை மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை உள்ளிட்ட மழை தொடர்பான முழு விவரத்தையும் உடனுக்குடன் இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
சென்னை: தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் புகுதிகளில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தொடர்ந்து மழை பெய்வதாலும், மழைநீர் சூழ்ந்து கிடப்பதாலும் மாணவர்கள் பாதுகாப்பு கருதி இன்று 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், விழுப்புரம், திருச்சி, தேனி, சிவகங்கை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.