ஜிம்பாப்வேவுக்கு பதிலடி கொடுக்குமா ஆப்கானிஸ்தான்? இன்று 2வது டி20 போட்டி!
ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி இன்று நடைபெறுகிறது.
ஹராரே: ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடந்தது.
இதில், ஜிம்பாப்வே அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது சொந்த மண்ணில் டி-20 தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்தது. முதலில் டாஸ் வென்று பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 144 ரன் எடுத்தது.
அடுத்ததாக, களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழந்து, 145 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வெற்றி பெற்றது.
இந்நிலையில், இன்று நடைபெறும் இரண்டாவது டி-20 போட்டியில் வெற்றியை கைப்பற்றும் நோக்கத்தில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடும்.
ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இந்த இரண்டாவது போட்டி இன்று மாலை 5 மணிக்கு ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைத்தானத்தில் இன்று (டிசம்பர் 13) நடைபெறுகிறது.
இன்றயை போட்டியில் விளையாட எதிர்பார்க்கப்படும் வீரர்கள்
ஆப்கானிஸ்தான் அணி:
ரஷித் கான் தலமையிலான இந்த அணியில், ரஹ்மானுல்லா குர்பாஸ், செடிகுல்லா அடல், ஹஸ்ரத்துல்லாஹ் ஜசாய், முகமது இஷாக், கரீம் ஜனத், அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, முஜீப் உர் ரஹ்மான், நவீன்-உல்-ஹக், ஃபரீத் மதின் நக்பலிப், அஹ்மத் மதீன், தர்வீஷ் ரசூலி, ஃபசல்ஹக் ஃபரூக்கி, நூர் அஹ்மத், நங்கேயாலியா கரோட், ஜுபைத் அக்பரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஜிம்பாப்வே அணி:
சிக்கந்தர் ராசா தலமையிலான இந்த அணியில், பிரையன் பென்னட், தடிவானாஷே மருமானி, டியான் மியர்ஸ், , ரியான் பர்ல், வெஸ்லி மாதேவெரே, தஷிங்கா முசெகிவா, வெலிங்டன் மசகட்சா, ரிச்சர்ட் நகரவா, பிளெஸ்ஸிங் முசரபானி, ட்ரெவர் க்வாண்டேம், டகுஸ்வண்யாம், ஃபராஸ்வனாஷ், ஃபாராஸ்வண்யாம், , டினோடெண்டா மபோசா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதில், 11 பேர் கொண்ட இரு அணி வீரர்களின் பட்டியல் டாஸ் போடும் சமையத்தில் அறிவிக்கப்பட்டும் .