திருவாண்ணாமலை தீபத்திருவிழாவில் குழந்தைகளை பாதுக்காக்க சூப்பர் ஐடியா!
திருவண்ணாமலைக்கு வரும் குழந்தைகள் தொலைந்து போவதை தடுக்க அவர்களின் பெயர், பெற்றோர் கைபேசி எண் அடங்கிய டேக் ஒன்று குழந்தைகளின் கைகளில் கட்டப்படுகிறது.
திருவண்ணாமலை : இன்று (டிசம்பர் 13) திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் உற்சவ நிகழ்வான தீப மலையில் தீபம் ஏற்றும் நிகழ்வானது இன்று மாலை நடைபெற உள்ளது. அதற்கான கொப்பரை தீப மலை உச்சிக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டது.
தீப மலையில் தீபம் ஏற்றும் நிகழ்வை காண மலைமீது எற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றாலும், மலை அடிவாரத்தில் பக்தர்கள் ஏராளமானோர் குவிந்துள்ளனர். சுமார் ஒரு லட்சம் வரையில் பக்தர்கல் திருவண்ணாமலைக்கு தற்போது வரையில் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
பக்தர்கள் வசதிக்காக பேருந்து , தங்குமிடம், உணவு, குடிநீர் என பல்வேறு வசதிகளை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. மேலும், திருவண்ணாமலைக்கு பக்தர்களுடன் வரும் குழந்தைகள் தொலைந்து விட கூடாது என அதனை தடுக்கும் நோக்கில் குழந்தையின் பெயர், முகவரி , பெற்றோரின் தொலைபேசி எண் ஆகியவை அடங்கிய டேக் ஒன்று குழந்தைகளின் கையில் கட்டப்படுகிறது. இதனால் கூட்டத்தில் குழந்தைகள் தொலைந்து சென்றால் அவர்களை கண்டறிய இந்த டேக் உதவும் என காவல்துறையினர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
பக்தர்களுக்கு உணவு வழங்கும் பொருட்டு மலை அடிவாரத்தில் கிரிவல பாதையில் சுமார் 250க்கும் மேற்பட்ட அமைப்புகளுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அன்னதான கூடத்தில் அமைச்சர் எ.வ.வேலு அன்னதானத்தை பக்தர்களுக்கு அளித்து துவங்கி வைத்தார்.