Live: விடாத கனமழை முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வரை.!
இன்றைய வானிலை நிலவரம், பள்ளிகளுக்கு விடுமுறை மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை உள்ளிட்ட மழை தொடர்பான முழு விவரத்தையும் உடனுக்குடன் இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
சென்னை: கனமழை எதிரொலியால் தஞ்சை, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விழுப்புரம், திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திண்டுக்கல், மதுரை, கடலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், விருதுநகர், சேலம், சிவகங்கை, தேனி, தருமபுரி, நாகை, நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் கனமழை காரணமாக பூண்டி ஏரியில் இருந்து தற்போது விநாடிக்கு 12,760 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கொசஸ்தலை ஆற்றங்கரையில் உள்ள தாமரைப்பாக்கம் உள்ளிட்ட 6 கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.