கனமழை எதிரொலி : தூத்துக்குடி பள்ளி – கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!
கனமழை காரணமாக நாளை 13.12.2024 அன்று பல்கலைக்கழக தேர்வு எழுதும் மாணவர்கள் தவிர மற்ற பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி : வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.
அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டத்திலும் மழை பெய்து வருகிறது. இதனால், இன்று (டிசம்பர் 12) பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இன்றும் கனமழை பெய்துள்ள நிலையில், நாளை விடுமுறை அறிவிப்பு.
அதன்படி, தூத்துக்குடி கனமழை காரணமாக நாளை 13.12.2024 அன்று பல்கலைக்கழக தேர்வு எழுதும் மாணவர்கள் தவிர மற்ற பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தூத்துக்குடி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.