டிராவை நோக்கி நகரும் உலக செஸ் சாம்பியன்ஷிப்! நாளை டை பிரேக்கர் முறையில் போட்டி!

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் 14-வது சுற்றில் குகேஷ், லிரேன் சமநிலையில் உள்ளனர். இந்த ஆட்டமும் டிராவில் முடிந்தால் நாளை டை பிரேக்கர் முறையில் போட்டி நடத்தப்படுகிறது.

chess championship 2024

சிங்கப்பூர்: உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024க்கான போட்டிகள் தற்போது விறு விறுப்பாக சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் சீன கிராண்ட் மாஸ்டர் டிங் லின் இருவரும் விளையாடி வருகிறார்கள். இந்த போட்டியில் யார் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை  வெல்லப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பும் அதிகரித்து கொண்டே செல்கிறது.

அதற்கு முக்கிய காரணமே, இந்த செஸ் போட்டியில் நடைபெறும் சுற்றுகள் டிரா ஆகி வருவது தான். குறிப்பாக, 14 சுற்றுகள் கொண்ட இந்த செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் சுற்று போட்டியில் டிங்கும் மூன்றாவது சுற்று போட்டிகள் குகேஷூம் வெற்றி பெற்றனர். அதனை தொடர்ந்து நடைபெற்ற 4-வது சுற்றிலிருந்து 10-வது சுற்று வரை சமநிலையிலேயே முடிவடைந்தது.

இதனையடுத்து,  11-வது சுற்று வரும் போது மூளைக்கு அதிகமாக வேலை கொடுத்து சிறப்பாக விளையாடிய குகேஷ் வெற்றிபெற்றார். அதனை தொடர்ந்து அடுத்த சுற்றான 12-வது சுற்றிலும் வெற்றிபெற்றார். அதன்பின் நேற்று நடைபெற்ற 13-வது சுற்றில் இருவரும் தலா 6.5 என்ற புள்ளியை பெற்றுக்கொண்ட நிலையில், 13-வது சுற்றுமே சமநிலையில் தான் முடிந்தது. எனவே, இருவரும் சமநிலையான புள்ளிகளை பெற்றுள்ள காரணத்தால்  14-வது சுற்றில் வெற்றிபெறுபவர் தான் வெற்றியாளர் எனவும் நேற்று கூறப்பட்டது.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற 14-வது சுற்றும் டிராவை நோக்கி நகர்ந்துள்ளது. 14ஆவது சுற்றில் போட்டி தொடங்கி 2 மணி நேரம் முடிவடைந்துள்ள நிலையில் இந்த சுற்றும் டிராவில் நடந்து முடிந்த காரணத்தால் நாளை டை பிரேக்கர் முறைப்படி சுற்று நடைபெறவுள்ளது. அந்த சுற்றில் யார் வெற்றிபெறுகிறாரோ அவர் தான் சாம்பியன் பட்டத்தை வெல்வார். யார் வெற்றியாளர் என்பதை நாளை வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்