தொடரை கைப்பற்றிய மேற்கிந்திய தீவுகள்! ஆறுதல் வெற்றிபெறுமா வங்கதேசம்?
மேற்கிந்திய தீவுகள் - வங்கதேசம் ஆகிய அணிகள் மோதிக்கொள்ளும் மூன்றாவது ஒரு நாள் போட்டி இன்று வார்னர் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
வெஸ்ட் : மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி 3 டெஸ்ட், 3 ஒரு நாள், 3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதில் ஏற்கனவே, டெஸ்ட் தொடர் சமநிலையில் முடிந்தது. இதனையடுத்து, ஒரு நாள் போட்டி நடைபெற்று வருகிறது.
ஒரு நாள் தொடரிலும் ஏற்கனவே, 2 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், இரண்டிலும் வெற்றிபெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றி விட்டது. இரு அணிகளும் மோதிக்கொள்ளும் மூன்றாவது போட்டி இன்று இரவு 7 மணிக்கு செயின்ட் கிட்ஸ் வார்னர் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் வெற்றிபெற்று ஆறுதல் வெற்றியையாவது வங்கதேசம் அணி பெறுமா? அல்லது இந்த ஒரு நாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று மேற்கிந்திய தீவுகள் கோப்பையை வாங்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இன்றயை போட்டியில் விளையாட எதிர்பார்க்கப்படும் வீரர்கள்
மேற்கிந்திய தீவுகள்
பிராண்டன் கிங், எவின் லூயிஸ், கீசி கார்டி, ஷாய் ஹோப் (c, wk), ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஜஸ்டின் க்ரீவ்ஸ், ரோஸ்டன் சேஸ், ரொமாரியோ ஷெப்பர்ட், மார்க்வினோ மைண்ட்லி, குடகேஷ் மோட்டி, ஜெய்டன் சீல்ஸ்
வங்கதேசம்
தன்சித் ஹசன், சௌமியா சர்க்கார், லிட்டன் தாஸ் (WK), மெஹிதி ஹசன் மிராஸ் (கேட்ச்), அஃபிஃப் ஹொசைன், மஹ்முதுல்லா, ஜாக்கர் அலி, ரிஷாத் ஹொசைன், தன்சிம் ஹசன் சாகிப், ஷோரிபுல் இஸ்லாம், நஹித் ராணா