டெல்லி: பெண்களுக்கு ரூ.1,000 ஆட்சிக்கு வந்தால் ரூ.2,100 வழங்கப்படும் -அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

Arvind Kejriwal

டெல்லி : இன்று காலை டெல்லி முதல்வர் அதிஷி மர்லினா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துகொண்டார். அதில் 2025 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு ஆளும் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தேசிய தலைநகரில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணின் வங்கி கணக்குகளிலும் ரூ.2,100 டெபாசிட் செய்யப்படும் என்று டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார்.

இது குறித்து பேசிய  பேசிய அரவிந்த் கெஜ்ரிவால்  ” ஒவ்வொரு பெண்ணுக்கும் ரூ.1000 தருவதாக நான் முன்பு உறுதியளித்திருந்தேன். ஆனால், சில பெண்கள் என்னிடம் வந்து  ரூ.1000 போதாது என்று கூறினார்கள்.  எனவே, அவர்களுடைய சிரமங்களை புரிந்துகொண்டு அவர்களுக்கு நான் கூடுதல் பணம் கொடுக்க முடிவு செய்துள்ளேன். ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக அனைத்து பெண்களின் கணக்குகளிலும் ரூ.2,100 டெபாசிட் செய்யப்படும்.

ரூ.1,000 வழங்குவதற்கான பதிவுகள் நாளை தொடங்கினாலும், முக்கியமான தேர்தலுக்கான தேதி அடுத்த 10 முதல் 15 நாட்களில் அறிவிக்கப்படும் என்பதால், தொகை உடனடியாக டெபாசிட் செய்யப்படாது என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த திட்டத்தை அறிவித்துள்ளது பெண்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live today update
PutraHeight Malaysia Fire
street dogs
csk Ashwani Kumar
goods trains collide in Jharkhand
TNPSC Group 1 Mains Exam
aadhav arjuna - Charles jose martin