Live: வெளுத்து வாங்கி வரும் கனமழை முதல் வெள்ள அபாய எச்சரிக்கை வரை.!
வானிலை நிலவரம் மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை உள்ளிட்ட மழை தொடர்பான முழு விவரத்தையும் உடனுக்குடன் இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
சென்னை: கனமழை காரணமாக பூண்டி ஏரி வேகமாக நிரம்பி வரும் நிலையில் இன்று மதியம் 1.30 மணிக்கு திறக்கப்படுகிறது. 35 அடி கொண்ட ஏரியில் தற்போது 34.05 அடி நீர் உள்ளது. இதனால், மதியம் 1.30 மணிக்கு விநாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது என திருவள்ளூர் ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனால், கரையோர மக்களுக்கு இன்று முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், திருவண்ணாமலை சாத்தனூர் அணையில் இருந்து விநாடிக்கு 10,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. விநாடிக்கு 5,000 கனஅடியாக திறக்கப்பட்ட நிலையில், தற்போது 10,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.