கனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு விடுமுறை… அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு.!
தமிழகத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் இன்று நடக்கவிருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
சென்னை: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தூத்துக்குடி, திருப்பத்தூர், கரூர், வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, அரியலூர், சென்னை, விழுப்புரம், தஞ்சை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், காஞ்சிபுரம், திருவாரூரில் பள்ளிகளுக்கு விடுமுறை ஆகும்.
மேலும், நெல்லையில் 1-5ம் வகுப்பு வரை மட்டும் விடுமுறை, அதே நேரம் திருவண்ணாமலை, புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அடுத்தடுத்த பள்ளிகளுக்கான விடுமுறை அறிவிப்பை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டு வருகின்றன.
அரையாண்டுத் தேர்வு ஒத்திவைக்கப்பு:
இந்நிலையில், கனமழை காரணமாக விடுமுறை விடப்பட்ட மாவட்டங்களில் இன்று (டிச.12) நடைபெறவிருந்த அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுவதாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தகவல் தெரிவித்துள்ளார்.
6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று ஆங்கிலத் தேர்வு நடைபெறவிருந்தது. இதனால், ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டுத் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.