Live: வைக்கம் போராட்ட நிறைவு விழா முதல்… சாத்தனூர் அணை நீர் திறப்பு வரை.!
இன்றைய வானிலை நிலவரம், பரபரப்பான தமிழக அரசியல் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை உடனுக்குடன் இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
சென்னை: வைக்கம் போராட்டத்தின் 100-ம் ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி கேரள மாநிலத்தில் புனரமைக்கப்பட்ட பெரியார் நினைவகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இந்த நிகழ்வில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் பங்கேற்க உள்ளார். தமிழ்நாடு அரசு சார்பில் சுமார் ரூ.8.14 கோடியில் நினைவகம் புதுப்பிக்கப்பட்டது.
கனமழை காரணமாக சாத்தனூர் அணையில் இருந்து 10,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் திறப்பு 5,000 கன அடியில் இருந்து 10,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. 119 அடி கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 117.50 அடியாக உள்ளது. எனவே, ஆற்றின் கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.