தி,மலை கார்த்திகை தீப விழா! கனரக வாகனங்களுக்கான மாற்றுப்பாதை அறிவித்த காவல்துறை!

வரும் டிசம்பர் 13-ஆம் தேதி திருவண்ணாமலையில் கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு கனரக வாகனங்களுக்கான மாற்றுப்பாதையை மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

Tiruvannamalai Karthigai Deepam

திருவண்ணாமலை : வரும் டிசம்பர் 13-ஆம் தேதி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத்திருவிழா நடைபெறவிருக்கிறது. ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் திருவண்ணாமலையில்  நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், இதில் பாறை உருண்டு விழுந்ததில் 7 பேர் இறந்த சோக சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கியது.

ஏற்கனவே, இதன் காரணமாக திருவண்ணாமலை மகா தீபத்திற்கு மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்து இருந்தார். இருப்பினும், மலையேற  தான் பக்தர்களுக்கு அனுமதி வழங்கபடவில்லை மற்றபடி கீழே நின்று தீபத்தை பார்த்துக்கொள்ளலாம்.  எனவே, இதற்காகவும் கண்டிப்பாக பக்தர்கள் பலரும் வருகை தருவார்கள்.   வெளிமாநிலங்களில் இருந்தும் பலரும் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தீப விழாவை முன்னிட்டு கனரக வாகனங்களுக்கான மாற்றுப்பாதை குறித்த விவரம் பற்றிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து திருவண்ணாமலை காவல்துறை வெளியீட்டு இருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது ” வெளி மாவட்டங்களில் இருந்து வழக்கமாக திருவண்ணாமலை வழியாக வேறு மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய கனரக வாகனங்கள் (HMV லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்கள்) மற்றும் இலகுரக – வாகனங்கள் (LMV – கார்,வேன் உள்ளிட்ட வாகனங்கள்) 12.12.2024 காலை 08.00 மணி முதல் 15.12.2024 காலை 06.00 மணி வரை திருவண்ணாமலை வழியாக வந்து செல்ல தடை செய்யப்பட்டுள்ளதுடன் மாற்றுப்பாதைகளில் செல்வதற்கான கீழ் காணும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.

மாற்றுப்பாதை

பெளூரு, கிருஷ்ணகிரி. திருப்பத்தூர் வழித்தடங்களிலிருந்து விழுப்புரம். கடலூர், புதுச்சேரி. திண்டிவனம் மார்கமாக செல்லும் கனரக மற்றும் இலகுரா வாகனங்கள் மாற்றுப்பாதையான பர்கூர் வாணியம்பாடி வேலூர் ஆற்காடு செய்யாறு- வந்தவாசி வழியாக செல்லவும். மேற்படி வாகளங்கள் ஊத்தங்கரை, செங்கம், திருவண்ணாமலை வழியாக செல்ல அனுமதி இல்லை.

விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, திண்டிவனம் வழித்தடங்களிலிருந்து கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், பெங்களூரு மார்கமாக செல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் மாற்றுப்பாதையான வந்தவாசி – செய்யாறு ஆற்காடு – வேலூர் – வாணியம்பாடி -பர்கூர் வழியாக செல்லவும்.செஞ்சி, கீழ்பென்னாத்தூர், திருவண்ணாமலை. வழியாக செல்ல அனுமதி கிடையாது.

திருப்பதி, கே.ஜி.எப். வேலூர் உள்ளிட்ட வழித்தடங்களிலிருந்து திண்டிவனம், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி மற்றும் திருச்சி மார்கமாக செல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் மாற்றுப்பாதையான வேலூர் – ஆற்காடு செய்யாறு -வந்தவாசி வழியாக செல்லலாம்.
கண்ணமங்கலம், போளூர், திருவண்ணாமலை வழியாக செல்ல அனுமதி இல்லை.

திண்டிவனம், விழுப்புரம், கடலூர், திருச்சி, புதுச்சேரி, வழித்தடங்களிலிருந்து திருப்பதி, கே.ஜி.எப். வேலூர் மார்கமாக செல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் மாற்றுப்பாதையான வந்தவாசி – செய்யார் – ஆற்காடு -வேலூர் வழியாக செல்லலாம்.
செஞ்சி, கீழ்பென்னாத்தூர், திருவண்ணாமலை வழியாக செல்ல அனுமதி இல்லை

பெங்களூரு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் வழித்தடங்களிலிருந்து விருத்தாசலம், சிதம்பரம், நாகப்பட்டினம் மார்கமாக செல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் மாற்றுப்பாதையான தர்மபுரி – தொப்பூர் – சேலம் வாழப்பாடி -ஆத்தூர் வழியாக செல்லவும். ஊத்தங்கரை, செங்கம், திருவண்ணாமலை, திருக்கோவிலூர் வழியாக செல்ல அனுமதி இல்லை.

விருத்தாசலம், சிதம்பரம், நாகப்பட்டினம், உள்ளிட்ட வழித்தடங்களிலிருந்து பெங்களூரு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மார்கமாக செல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் மாற்றுப்பாதையான ஆத்தூர் – வாழப்பாடி – சேலம் தொப்பூர் -தர்மபுரி வழியாக செல்லவும்.திருக்கோவிலூர், மணலூர்பேட்டை, சங்கராபுரம், திருவண்ணாமலை வழியாக செல்ல அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

TAMIL NEWS LIVE
poondi dam
rajinikanth - tvk vijay -mk stalin
Vaikom 100 Function
Vaikom 100
2024 vaikom award to Kannada writer Devanuru Mahadeva