சிரிக்க ” சூது கவ்வும் 2 ” காதலிக்க “மிஸ் யூ”! ஒரே நாளில் வெளியாகும் 3 தமிழ் திரைப்படங்கள்!

'சூது கவ்வும்-2', 'மிஸ் யூ' 'Once Upon A Time In Madras' ஆகிய 3 திரைப்படங்கள் டிசம்பர் 13 ஒரே நாளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

soodhu kavvum 2

சென்னை : வாரம் வாரம் வெள்ளிக்கிழமை தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியாகிக்கொண்டு வருகிறது. அப்படி இந்த வாரம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 13) 3- தமிழ் திரைப்படங்கள் திரைக்கு வரவுள்ளது.அது என்னென்ன திரைப்படங்கள் எந்த மாதிரி கதையம்சம் கொண்ட படங்கள் என்பதை பற்றி பார்ப்போம்.

சூதுகவ்வும் 2

விஜய் சேதுபதி நடிப்பில் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற படம் தான் சூதுகவ்வும். இந்த படத்தின் இரண்டாவது பாகத்தில் விஜய் சேதுபதி நடிக்காத நிலையில், அவருக்கு பதிலாக மிர்ச்சி சிவா நடித்திருக்கிறார். முதல் பாகத்தில் காமெடி கலந்த ஒரு கதை இருக்கும் இந்த இரண்டாவது பாகத்தில் கலகலப்பு அதிகமாக இருக்கும் என மிர்ச்சி சிவாவே படம் குறித்து பேசியிருந்தார். எனவே, காமெடியாக படம் பார்க்க விரும்புபவர்கள் இந்த படத்தினை பார்க்க செல்லலாம்.

மிஸ்யூ

சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள மிஸ்யூ திரைப்படம் காதலித்து பிறகு விட்டு செல்வதை வைத்து எடுக்கப்பட்ட ஒரு படம் என்பது போல தெரிகிறது. சித்தா எனும் ஹிட் படத்திற்கு பிறகு இப்படியான ஒரு கதையை அவர் தேர்வு செய்து ஹீரோவாக நடித்துள்ள காரணத்தால் இந்த படத்தின் மீதும் எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே, இந்த படத்தினை பார்க்கவும் காதலர்களுக்கு மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

Once Upon A Time In Madras

பரத் நடிப்பில்  உருவாகியுள்ள “Once Upon A Time In Madras” என்ற திரைப்படம் அதிரடியான அக்சன் காட்சிகளை கொண்ட படமாக எடுக்கப்பட்ட காரணத்தால் கண்டிப்பாக ஆக்சன் விரும்புவார்கள் இந்த படத்திற்கு செல்லலலாம். படத்தில் ஆக்சன் மட்டுமின்றி காதல் கதையையும் இருப்பதால் பார்வையாளர்களை படம் வெகுவாக கவரும் என படக்குழு நம்புகிறார்கள்.

மூன்று படங்கள் ஒரே தினத்தில் வெளியாகிறது என்பதால் எந்த படத்திற்கு அதிக அளவுக்கு வரவேற்பு கிடைத்து வசூல் ரீதியாக நல்ல ஓப்பனிங் கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live rain news
school leave rain thoothukudi
tn school leave rain
gukesh dommaraju
gukesh dommaraju pm modi
gukesh dommaraju mk stalin
Chikitu Vibe