நான் இப்படி தான் கிரிக்கெட் கத்துக்கிட்டேன்! பும்ரா சொன்ன ரகசியம்!

தொலைக்காட்சியை பார்த்து தான் கிரிக்கெட் விளையாடவே கற்றுக்கொண்டேன் என வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார்.

jasprit bumrah

டெல்லி : இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு ஒரு தூணாக திகழ்ந்து வருகிறார். இந்த அளவுக்கு சிறப்பாக இவர் பந்துவீசுவதால் நம்மளுடைய எண்ணம் கண்டிப்பாக இவர் சிறிய வயதில் எதோ ஒரு பெரிய பயிற்சியாளரிடம் தான் பயிற்சிபெற்று இருக்கிறார் என யோசித்திருப்போம். ஆனால், உண்மையில் அவர் பெரிய பயிற்சியாளர்களிடம் பயிற்சிபெறவில்லை.

எப்படி பயிற்சி பெற்று இந்த அளவுக்கு சிறப்பாக விளையாடுகிறேன் என்ற காரணத்தையும் அவரே தெரிவித்து இருக்கிறார். தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசிய அவர் ” நான் என்னுடைய சிறிய வயதில் இருந்து அதிகமாக கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பாகும் சேனல்களை தொலைக்காட்சியில் பார்ப்பேன். அவர்கள் எப்படி எப்படி விளையாடுகிறார்கள் அதில் என்னென்ன விஷயங்களை கற்றுக்கொள்ளலாம் என்பதையும் பார்ப்பேன்.

அப்படி பார்த்து கொண்டு தான் நான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தேன். தொலைக்காட்சிகளை பார்த்து தான் கிரிக்கெட் விளையாடுவதற்கான பயிற்சிகளையும் மேற்கொண்டேன். ஏதாவது தெரியவில்லை என்றால் கூட அக்கம் பக்கத்தில் அதற்கான பதிலை தேடமாட்டேன். எனக்குள் என்ன தவறு இருக்கிறது என்பதையும் தொலைக்காட்சியில் மற்றவர்கள் விளையாடுவதை பார்த்து தான் கற்றுக்கொண்டேன்.

என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் இது மிகவும் பெரிய விஷயமாகவும் எனக்கு தைரியத்தையும் கற்றுக்கொடுத்த விஷயமாக நான் எப்போதும் பார்க்கிறேன். அந்த சமயத்தில் எனக்கு யாரும் பெரிய அளவில் நான் பயிற்சி பெறுவதற்கு உதவி செய்யவில்லை நானே கற்றுக்கொண்டு விளை யாட வந்தேன்” எனவும் இளம் வீரர்களுக்கும் கிரிக்கெட்டில் ஆர்வம் இருப்பவர்களுக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் ஜஸ்பிரித் பும்ரா பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live rain news
TAMIL NEWS LIVE
Arvind Kejriwal
Deepa koparai (1)
dhanush nayanthara
Red Alert
Vaikom 100 - MK Stalin - Pinarayi Vijayan