இன்று 5 மாவட்டங்களில் கனமழை… நாளை 6 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை!
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்ற நிலையில், இன்று முதல் வருகின்ற 13ம் தேதி வரை கனமழை மற்றும் மிக கனமழைக்கான எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, (10-12-2024) காலை 8.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு திசையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை – தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, இன்று முதல் வருகின்ற 13ம் தேதி வரை கனமழை மற்றும் மிக கனமழைக்கான எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
இன்று (டிச.10 ) மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாளை (டிச.11 ) கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழை பெய்யும்
மேலும், சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருவள்ளூர் 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.