இன்றைய டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள்! விவரம் இதோ…

இன்று மேற்கிந்திய தீவுகள் - வங்கதேசம் அணிக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி மற்றும் தென்னாப்பிரிக்கா -பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான முதல் டி20 போட்டியும் நடைபெறுகிறது.

south africa vs pakistan - West Indies vs Bangladesh

செயின்ட் கிட்ஸ்: இன்று மேற்கிந்திய தீவுகள் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியும், தென்னாப்பிரிக்கா – பாகிஸ்தான் அணிகளுக்கும் இடையிலான முதல் டி20  போட்டியும் இன்று இரவு நடைபெறுவுள்ளது. இரண்டு போட்டிகளிலும் விளையாட எதிர்பார்க்கப்படும் வீரர்கள் பற்றிய விவரேம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் VS வங்கதேசம்

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள வங்கதேச அணி, 3 டெஸ்ட் போட்டிகள், 3  ஒரு நாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள்,  கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் டெஸ்ட் தொடர் சமநிலையில் முடிந்தது. அதனைத்தொடர்ந்து, முதல் ஒரு நாள் போட்டி கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், அதில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஒரு நாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ்  முன்னிலையில் உள்ளது.

முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து இரண்டாவது போட்டி இன்றிரவு 7 மணி அளவில் செயின்ட் கிட்ஸ் வார்னர் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது.

விளையாட எதிர்பார்க்கப்படும் வீரர்கள் 

வெஸ்ட் இண்டீஸ் : எவின் லூயிஸ், பிராண்டன் கிங், கீசி கார்டி, ஷாய் ஹோப் (c & wk), ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஜஸ்டின் க்ரீவ்ஸ், ரோஸ்டன் சேஸ், ரொமாரியோ ஷெப்பர்ட், குடகேஷ் மோட்டி, அல்ஸாரி ஜோசப், ஜெய்டன் சீல்ஸ்

வங்கதேசம் : சௌமியா சர்க்கார், தன்சித் ஹசன், லிட்டன் தாஸ், அபிஃப் ஹொசைன், மெஹிதி ஹசன் மிராஸ் (கேட்ச்), மஹ்முதுல்லா, ஜாக்கர் அலி (வி.கே.), ரிஷாத் ஹொசைன், தன்சிம் ஹசன் சாகிப், தஸ்கின் அகமது, நஹித் ராணா

தென்னாப்பிரிக்கா VS பாகிஸ்தான்

அதே போல, தென்னாபிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 டி20 போட்டி, 3 ஒரு நாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடருக்கான முதல் போட்டி இன்று (டிசம்பர் 10)  இரவு 9.30 மணி அளவில் டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் நடைபெறுகிறது.

எதிர்பார்க்கப்படும் வீரர்கள் 

தென்னாப்பிரிக்கா :  மேத்யூ ப்ரீட்ஸ்கே, ரீசா ஹென்ட்ரிக்ஸ், ரஸ்ஸி வான் டெர் டுசென், ஹென்ரிச் கிளாசென்(w/c), டேவிட் மில்லர், டொனோவன் ஃபெரீரா, ஜார்ஜ் லிண்டே, பேட்ரிக் க்ரூகர், அன்ரிச் நார்ட்ஜே, ஒட்னீல் பார்ட்மேன், தப்ரைஸ் ஷம்சி.

பாகிஸ்தான் : முகமது ரிஸ்வான் (c/wk), சைம் அயூப், பாபர் ஆசம், உஸ்மான் கான், சல்மான் அலி ஆகா, இர்ஃபான் கான் நியாசி, சுஃபியான் முகீம், ஜஹந்தத் கான், அப்பாஸ் அப்ரிடி, ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப்.

கடைசியாக தென்னாப்பிரிக்கா அணி இந்திய அணிக்கு எதிராக 4 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிது. அதில் இந்திய 3-1 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. அந்த தொடரில் தோல்வியடைந்ததை தொடர்ந்து இந்த தொடரில் வெற்றிபெறவேண்டும் என்ற முனைப்புடன் தென்னாப்பிரிக்கா அணி களமிறங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்