திமுக, விசிக வெற்றிக்கு பின்னால் ஆதவ் அர்ஜுனா? வெளியான பரபரப்பு வீடியோ!
2015, 2019, 2021 ஆகிய தேர்தல்களில் திமுக தேர்தல் வெற்றிக்கு வியூகம் வகுத்த குழுவில் முக்கிய பங்காற்றியதாக ஆதவ் அர்ஜுனா தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
சென்னை : தற்போதைய தமிழக அரசியலில் ஹாட் டாப்பிக்காக மாறி வருகிறார் ஆதவ் அர்ஜுனா. தேர்தல் களப்பணி முதல் விசிக உடன் இணைந்து கட்சி பணிகள், அடுத்து விஜயுடன் ஒரே மேடையில் ஒருமித்த கருத்து , விசிகவில் இருந்து 6 மாத கால சஸ்பெண்ட் என பல்வேறு அரசியல் நிகழ்வுகளில் மையப்புள்ளியாக இருந்து வருகிறார் ஆதவ் அர்ஜுனா.
இப்படியான சூழலில் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஆதவ் அர்ஜுனா. அதில், 2015, 2019, 2021 ஆகிய தேர்தலில் திமுக தேர்தல் வியூக குழுவில் முக்கிய பங்காற்றியதாகவும், அடுத்து விசிக உடனான தனது அரசியல் பயணம் குறித்தும் அந்த வீடியோவில் ஆதவ் அர்ஜுனா பதிவு செய்துள்ளார்.
ஆதவ் அர்ஜுனா பதிவு செய்த வீடியோவில், அரசியலில் நீங்கள் தலையிடவில்லை என்றால் அரசியல் உங்கள் வாழ்வில் தலையிடும் என புரட்சியாளர் லெனின் கூறிய வார்த்தைகளோடு வீடியோ ஆரம்பிக்கிறது. அடுத்த தலைமுறையிடம் அரசியலை கொண்டு சேர்க்க உருவாக்கப்பட்ட தளம் Voice of commons எனும் நிறுவனம். இதனை நிறுவியவர் ஆதவ் அர்ஜுனா என பதிவிட்டு ஆதவ் அர்ஜுனா கடந்து வந்த பாதையை வீடியோவில் குறிப்பிடப்படுகிறது.
5 வயதில் பெற்றோரை இழந்த ஆதவ் அர்ஜுனா, கூடைப்பந்து விளையாட்டில் திறமையாக விளையாடி, சென்னை மேம்பாட்டு ஆணைய விடுதியில் தங்கி பயில தொடங்கி, சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில் அரசியல் பயின்றார்.என்று ஆதவ் அர்ஜுனா கல்லூரி வாழ்வு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, பெரியாரின் சமத்துவ கருத்துக்கள் தமிழகத்தில் வேரூன்ற அண்ணாவின் அரசியல் வெற்றி முக்கிய காரணம். பெரியார் கொள்கைகளுக்கு அண்ணா தனது ஆட்சியால் செயல் வடிவம் கொடுத்தார். ஆனால், அம்பேத்கரின் கருத்துக்கள் செயல் வடிவம் பெற முடியவில்லை. தேர்தல் அரசியலில் அவர் கொள்கைகளை செயல்படுத்தும் ஆட்சிகள் அமையவில்லை.
ஒரு அரசியல் கொள்கை செயல் வடிவம் பெற தேர்தல் அரசியல் வெற்றி பிரதானம் என ஆதவ் அர்ஜுனா அறிந்ததாகவும், அதன் பிறகு தேர்தல் அரசியல் குறித்து ஆய்வு செய்ய தொடங்கினர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு திமுக தேர்தல் வியூக பணிக்குழுவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை ஆதவ் அர்ஜுனா வகித்துள்ளார் என்றும், 2019இல் திமுக வெற்றியை எளிதாக்க One Mind India எனும் நிறுவனத்தை துவங்கினார் என்றும், இந்த நிறுவனம் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளையும் பகுப்பாய்வு செய்து தேர்தல் வியூகத்தை கட்டமைத்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
திமுக தேர்தல் யுக்திகளை நவீனப்படுத்த, புதிய யுக்திகளை மேற்கொள்ளவும் I-PAC தலைவர் பிரசாந்த் கிஷோரை அழைத்து வந்தது ஆதவ் அர்ஜுனா என்றும், 2021 தேர்தலில் திமுக வெற்றிக்கு ஆதவ் அர்ஜுனா முக்கிய பங்காற்றினார் என்றும், அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றது என்றும் அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னர் One Mind India நிறுவனம் Voice Of Commons எனும் நிறுவனமாக மாற்றப்பட்டு 2022இல் விசிகவுடன் செயல்பட தொடங்கியது. விசிக கட்சி நிர்வாகத்தில் நவீன சீரமைப்பு , 15ஆயிரம் பேருடன் பூத் கமிட்டி ஆலோசனை என விசிக வளர்ந்தது என்றும், திருச்சியில் ‘வெல்லும் சனநாயகம் மாநாடு’ ஒருங்கிணைத்தது வாய்ஸ் ஆப் தாமஸ் தலைவர் ஆதவ் அர்ஜுனா, 2024 தேர்தலில் டிஜிட்டல் வடிவில் தேர்தல் பிரச்சாரம் கொண்டு வந்து QR Code மூலம் தேர்தல் பிரச்சாரம் செய்தது வாய்ஸ் ஆப் காமன்
அடுத்து போதைக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னின்று உளுந்தூர்பேட்டையில் விசிக நடத்திய மது ஒழிப்பு மாநாட்டை நடத்தியது வாய்ஸ் ஆப் காமன்ஸ். ஆட்சி அதிகாரப்பகிர்வு எனும் முழக்கத்தோடு தேர்தல் அரசியலில்
ஒரு நேர்மையான மக்களுக்கான அரசு அமைய வருங்கால சமூகத்தை அரசியல் சமூகமாக்கி தேர்தல் அரசியலை அனைவருக்குமான இயக்கமாக மாற்ற விரைவில் வீரநடை போட வருகிறது வாய்ஸ் ஆப் காமன்ஸ் என அந்த வீடியோ பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்ற முழக்கத்துடன் எளிய மக்கள் அதிகாரத்தை அடைவதற்கான பிரச்சாரத்தை மக்கள் சக்தியுடன் விரைவில் உருவாக்குவோம்! pic.twitter.com/vTkmTxTND8
— Aadhav Arjuna (@AadhavArjuna) December 10, 2024