இரண்டே சான்ஸ்… உலக செஸ் சாம்பியன்ஷிப்பை வெல்வாரா குகேஷ்?
உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், 12வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் தோல்வியடைந்துள்ளார்.
சிங்கப்பூர்: உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024க்கான போட்டிகள் (FIDE) சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் விளையாடி வருகிறார். இவர் சீன கிராண்ட் மாஸ்டர் டிங் லின்னை எதிர்கொண்டு விளையாடி வருகிறார்.
மொத்தம் 14 சுற்றுகள் கொண்ட இந்த செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 11வது சுற்று போட்டி இன்று நடைபெற்றது. தற்பொழுது, இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், 12வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளார்.
கடந்த 11-வது சுற்றில் வெற்றிபெற்று குகேஷ் முன்னிலை வகிக்க, 12வது சுற்றில் டிங் லின் வெற்றியால் கூடுதல் ஒரு புள்ளி பெற்றதன் மூலம் இரு வீரர்களும் தலா 6 புள்ளிகள் கணக்கில் சமநிலையில் உள்ளனர்.
தற்போது, மிகவும் போட்டி நிறைந்த இந்த தொடரில் இரண்டு ஆட்டங்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில், வெற்றி யாருக்கு? என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.