Live: கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மறைவு முதல்… தமிழக சட்டப்பேரவை வரை!
பரபரப்பான தமிழக அரசியல் நிலவரம், வானிலை நிலவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை உடனுக்குடன் இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
சென்னை: கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணா காலமானார். அவருக்கு வயது 92. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த எஸ்.எம்.கிருஷ்ணா பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் இன்று காலமானார்.
இரண்டு நாட்கள் நடைபெறும் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இரண்டாம் நாளான இன்று காலை 9.30 மணி அளவில் தொடங்குகிறது. நேற்று மதுரை டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு எதிராக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், சிறப்பு தீர்மானமாக கொண்டுவரப்பட்ட டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்யக் கோரிய சட்டப்பேரவை தீர்மானத்தை தமிழக அரசு, மத்திய அரசுக்கு அனுப்பியது. மேலும், அரசின் தனித் தீர்மானம் மத்திய கனிம வளம் மற்றும் சுரங்கத்துறை செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர்.