“ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை”ஆதவ் அர்ஜூனா பரபரப்பு அறிக்கை!

புரட்சியாளர் அம்பேத்கர், பெரியார், அண்ணா ஆகியோரின் கருத்துக்களை உள்வாங்கி அரசியல் பயணத்தைத் துவங்கினேன் என ஆதவ் அர்ஜுனா எக்ஸ் வலைத்தள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

thol thirumavalavan aadhav arjuna

சென்னை : சமீபத்தில் சென்னையில் நடந்த ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ எனும் புத்தக வெளியீட்டு விழாவில் விசிக கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா 2026இல் மன்னராட்சியை ஒழிக்க வேண்டும். யாரும் பிறப்பால் முதலமைச்சர் ஆக கூடாது என்று பேசியிருந்தார்.

விசிக கூட்டணி வைத்திருக்கும் திமுகவுக்கு எதிராக அவர் கருத்து கூறியதாக அரசியல் வட்டாரத்தில் அவருடைய பேச்சுக்கள் ஹாட் டாப்பிக்காக மாறியது. இதனையடுத்து, இதுகுறித்து உயர்மட்ட குழுவினர் உடன் ஆலோசனை எடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்து இருந்தார்.

அதனைத்தொடர்ந்து இன்று  திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.  அந்த அறிக்கையில்,  ஆதவ் அர்ஜுனா கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக கூறி கட்சியில் இருந்து 6 மாத காலம் இடைநீக்கம் செய்யப்படுவதாக” அறிவித்து இருந்தார். கட்சியில் இருந்து இடைநீக்கம்  செய்யப்பட்டதை தொடர்ந்து ஆதவ் அர்ஜுனா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது “அதிகாரத்தை அடைவோம்’ என்று எழுச்சித் தமிழர் எந்த முழக்கத்தோடு இந்த கட்சியைக் கட்டமைத்தாரோ அந்த அதிகாரத்தை ஒடுக்கப்பட்ட மக்கள் அடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடனே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் எனது பயணத்தைக் கடந்த ஜனவரி மாதம் ஆரம்பித்தேன்.

எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பினை உணர்ந்து கொள்கை உறுதிப்பாட்டுடன் கட்சியை அடுத்தகட்டத்திற்கு வளர்த்தெடுக்கும் பணியினையே நான் முழுமையாக மேற்கொண்டேன். கட்சியின் பிரச்சார வியூகத்தையும் கொள்கை வழியிலேயே கட்டமைத்தேன். நான் கட்சியில் என்ன பணி செய்தேன் என்பதை அடிமட்ட தொண்டர்களாய் களமாடும் தோழர்கள் நன்கு அறிந்திருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அந்த தொண்டர்களின் குரலாக நான் எப்போதும் இருப்பேன்.

தலைவரின் கையெழுத்திட்ட துணைப் பொதுச்செயலாளர் என்கிற பொறுப்பு கடிதம் கிடைக்கப்பெற்ற போது என்ன மனநிலையில் இருந்தேனோ, அதே மனநிலையில் இப்போது தலைவரின் கையெழுத்துடன் வெளியாகியுள்ள எனது இடைநீக்கம் குறித்த கடிதத்தையும் எதிர்கொள்கிறேன்.

தலித் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்ற முழக்கத்தை அந்த மக்களுக்கான அதிகாரம் கிடைக்கும் வரை தொடர்ந்து முழங்கிக்கொண்டு இருப்பதே நேர்மையான மக்கள் அரசியலாக இருக்கும் என்ற எனது உள்ளார்ந்த எண்ணத்தை தோழர்கள் மத்தியில் இப்போதும் பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளேன்.

கருத்தியல் பேசிக்கொண்டு ஊழலை உருவாக்கும் போலி கருத்தியல்வாதிகளை மக்கள் மத்தியில் அடையாளப்படுத்திக் காட்டுவோம். மத பெரும்பான்மைவாதம், சாதி ஆதிக்கம், பெண்ணடிமைத்தனம், சிறுபான்மையினருக்கு எதிரான அச்சுறுத்தல், எளிய மக்களுக்கு எதிரான ஆதிக்க மனநிலை என இந்த சமூகத்தில் தொடர்ந்து நடந்துவரும் அநீதிகளுக்கு எதிரான என்னுடைய குரல் சமரசமில்லாமல் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

புரட்சியாளர் அம்பேத்கர், பெரியார், அண்ணா ஆகியோரின் கருத்துக்களை உள்வாங்கி அரசியல் பயணத்தைத் துவங்கினேன். அந்த கொள்கைகளின் வழியில் எனது பயணம் எப்போதும் தொடரும்.  புரட்சியாளர் அம்பேத்கர் சுட்டிக்காட்டியது போல், ‘சிந்திப்பதற்கான சுதந்திரமே, உண்மையான சுதந்திரம்’ என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டு புதிய ஜனநாயகத்தை உருவாக்குவோம்.

எனது சிறுவயதிலிருந்து ஏமாற்றம், தோல்விகள், இழப்புகள் எனக் காலம் தந்த நெருக்கடிகளே என்னை உத்வேகத்துடன் பயணிக்கச் செய்தன. கட்சித் தலைமையின் இந்த நடவடிக்கையினையும் அந்த காலத்தின் கரங்களில் ஒப்படைக்கிறேன். ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவ(ன்) மறைவதில்லை!” எனவும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live rain news
TAMIL NEWS LIVE
Keerthy Suresh Marriage
M K Stalin
WI vs ban
tea (1) (1)
RAIN UPDATE balachandran
One Nation One Election