ரிசர்வ் வங்கி ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம்!

ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக வருவாய்த்துறை செயலாளர் சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

sanjay malhotra

டெல்லி :  ரிசர்வ் வங்கியின் அடுத்த ஆளுநராக வருவாய்த்துறை செயலாளர் சஞ்சய் மல்ஹோத்ராவை நியமிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.  1990 ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான மல்ஹோத்ரா நிதி, வரிவிதிப்பு, மின்சாரம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுரங்கம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் 33 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தை வைத்திருக்கிறார்.

இந்த சூழலில், அவருக்கு ரிசர்வ் வங்கியின் அடுத்த ஆளுநராகும் பதவியை மத்திய அரசு வழங்கியுள்ளது. எனவே, மத்திய வங்கியின் 26வது ஆளுநராக பதவியேற்கவுள்ளார். எனவே, டிசம்பர் 11-ஆம் தேதி ஆளுநர் பதவியை ஏற்கவுள்ள அவர் 3 ஆண்டுகள் பணியில் இருப்பார்.

இதற்கு முன்னதாக சக்திகாந்த தாஸ் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தார். அவருடைய பதவிக்காலம் டிசம்பர் 10 ஆம் தேதி நிறைவடைய உள்ள நிலையில், மத்திய வருவாய் துறை செயலாளராக இருந்த சஞ்சய் மல்ஹோத்ரா ஆர்பிஐயின் புதிய ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live rain news
TAMIL NEWS LIVE
gukesh dommaraju mk stalin
Chikitu Vibe
world chess champion gukesh
pm modi CM stalin
chess championship 2024
rain news