“Oh My God.. எப்போ?”.. திருவண்ணாமலை நிலச்சரிவு… நடிகர் ரஜினிகாந்த் அதிர்ச்சி!
நிலச்சரிவால் திருவண்ணாமலையில் உயிரிழந்த 7 பேர் உயிரிழந்தது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் அதிர்ச்சியடைந்துள்ளார்
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேங்ஸ்டர் படமான ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, இப்படத்தின் பெரும்பகுதி சென்னை மற்றும் விசாகப்பட்டினத்தில் முடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக ஜெய்ப்பூர் புறப்பட்டார் ரஜினிகாந்த். இன்று காலை ஜெய்ப்பூர் செல்வதற்காக சென்னை விமானம் நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்திடம், தி.மலை நிலச்சரிவில் 7 பேர் உயிரிழந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ரஜினி, “எப்போ?” என்றார். பின்னர், செய்தியாளர்கள் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனரே? என்று விளக்கம் கொடுத்ததற்கு பின், “ஓ மை காட்” சாரி… என்று ரியாக்ஷன் கொடுத்துவிட்டு வருத்தம் தெரிவித்து சென்றார்.
இதனையடுத்து, தமிழகத்தையே உலுக்கிய சம்பவம் கூட ரஜினிக்கு தெரியவில்லையா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். வருகின்ற 12ம் தேதி ரஜினியின் 74வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது, கடந்தமுறை அவரது பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்கள் அவரது இல்லத்திற்கு முன்பு கூடி வாழ்த்து தெரிவிக்க ரஜினிக்காக காத்திருந்தனர்.
ஆனால், அவர் அப்பொழுது படப்பிடிப்புக்காக வெளி ஊர் சென்று விட்டார் என்று அவரது மனைவி லதா ரஜினிகாந்த் விளக்கம் அளித்தார். இந்தமுறை, கூலி படப்பிடிப்புக்காக ஜெய்ப்பூர் சென்றுவிட்டார். ஓரிரு நாட்களில் சென்னை திரும்புவரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.