நாளை முதல் கனமழை எச்சரிக்கை – மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்தது உத்தரவு.!
தமிழ்நாட்டிற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் நாளை முதல் 13ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, கடலூரில் கனமழை பெய்யக்கூடும்.
நாளை மறுநாள், 11-ஆம் தேதி கடலூர், மயிலாடுதுறை, நாகையில் மிக கனமழையும், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டையில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
இந்நிலையில், கனமழை முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, நிலையான வழிகாட்டு விதிமுறைகளின் படி, கனமழை முதல் மிகக் கனமழை காரணமாக ஏற்படும் எந்தத் தேவையையும் சமாளிக்க அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
பேரிடர்களைக் கையாள்வதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளைக் கடைப்பிடிக்கவும், மாவட்ட வாரியாக இயந்திரங்களையும் தயார்படுத்தவும், எதிர்பாராத நிகழ்வுகள் நடைபெற்றால் உடனடியாக பேரிடர் மேலாண்மை துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மிக கனமழை எச்சரிக்கையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு கடிதம் #tamilnadu | #WeatherUpdate | #TNRains pic.twitter.com/1owf0ODMNz
— Dinasuvadu (@Dinasuvadu) December 9, 2024