உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 : குகேஷ் வெற்றி!

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 11வது சுற்றில் சீன வீரர் டிங் லின்னை இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் வெற்றிபெற்றுள்ளார்.

Indian Chess Grandmaster Gukesh

சிங்கப்பூர் : உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024க்கான போட்டிகள் சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது . இதில் இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் விளையாடி வருகிறார். இவர் சீன கிராண்ட் மாஸ்டர் டிங் லின்னை எதிர்கொண்டு விளையாடி வருகிறார்.

மொத்தம் 14 சுற்றுகள் கொண்ட இந்த செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 11வது சுற்று போட்டி இன்று நடைபெற்றது. இதில் குகேஷ் 29வது நகர்வில் தனது வெற்றியை உறுதி செய்தார். இதன் மூலம் 11 சுற்றுகளில் 6-5 என்ற வீதத்தில் முன்னிலை பெற்றுள்ளார் குகேஷ்.

இனி வரும் 3 சுற்றுகளில் அதிக வெற்றி பெற்றாலோ அல்லது அனைத்திலும் டிரா செய்தாலோ 2024ஆம் ஆண்டுக்கான உலக செஸ் சாம்பியன் எனும் பட்டத்தை வெல்லும் இளம் கிராண்ட் மாஸ்டர் எனும் பெருமையை பெறுவார் குகேஷ்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்