தடம் பதிக்கும் ‘புஷ்பா’ பிராண்ட்.! அடித்து நொறுக்கும் இமாலய வசூல் சாதனை!
அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 திரைப்படம் உலகளவில் 500 கோடி வசூலை 3 நாளில் கடந்து சாதனை படைத்துள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.
சென்னை : அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உலகம் முழுக்க பான் இந்தியா திரைப்படமாக கடந்த டிசம்பர் 5ஆம் தேதி வெளியான திரைப்படம் புஷ்பா 2. முதல் பாகத்தின் மிகப்பெரிய வெற்றி இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை வானளவு உயர்த்தியது. அதனை பூர்த்தி செய்யும் வகையில் படம் அமைந்து இருப்பதால் படத்தின் வசூலும் விண்ணை முட்டுகிறது.
புஷ்பா படத்தின் முதல் பாகம் 2021இல் வெளியானது. அப்போது இந்த படத்தின் மொத்த வசூல் சுமார் 350 கோடி என்ற அளவிலேயே இருந்தது. ஆனால், 2ஆம் பக்கத்தின் வசூல் அதனை 2 நாளில் மிஞ்சி வசூலில் மிரட்டி வருகிறது.
3ஆம் நாள் பாக்ஸ் ஆபிஸில் இப்படம் ரூ.115 கோடிவசூல் செய்துள்ளதாகவும், இந்தி பதிப்பில் 73.5 கோடியும், தெலுங்கு பதிப்பில் ரூ.31.5 கோடியும், தமிழில் இப்படம் ரூ.7.5 கோடியும் வசூல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் 2ஆம் நாள் வசூல் ரூ.93.8 கோடியாக இருந்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனை அடுத்து இந்திய சினிமா வரலாற்றில் ஒரு திரைப்படம் 3 நாளில் 500 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது என்ற சாதனையை புஷ்பா 2 திரைப்படம் படைத்துள்ளது என புஷ்பா 2 படக்குழு அறிவித்துள்ளனர். இப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மற்றும் பகத் பாசில் ஆகியோர் நடிப்பும் சாம் சி.எஸ் பின்னணி இசையும், சுகுமாரின் விறுவிறுப்பான திரைக்கதையும் ரசிகர்களை வெகுமளவு ஈர்த்துள்ளது.