தமிழகத்தில் டிசம்பர் 12-ல் கனமழை! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தை நெருங்குவதால் டிசம்பர் 11,12,13களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Heavy rain fall in Tamilnadu

சென்னை : கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெஞ்சல் புயலாக மாறி வடதமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கனமழை மீட்பு பணிகள் தற்போது வரை தொடர்ந்து வருகிறது. இப்படியான சூழலில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது .

இப்படியான சூழலில்  இந்திய வானிலை ஆய்வு மையம் அண்மையில் வெளியிட்ட தகவலின்படி, வங்கக்கடலை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது எனவும், அது அடுத்த 24 மணிநேரத்தில் மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், வரும் டிசம்பர் 11, 12, 13 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறப்பட்டு பொதுவான அளவில் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதில் டிசம்பர் 12ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live rain news
school leave rain thoothukudi
tn school leave rain
gukesh dommaraju
gukesh dommaraju pm modi
gukesh dommaraju mk stalin
Chikitu Vibe