விடாமுயற்சி டப்பிங் ஓவர் பொங்கல் தான் ரிலீஸ்! தேதியை உறுதி செய்த படக்குழு!

'விடாமுயற்சி' திரைப்படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் அஜித்குமார் நிறைவு செய்தார்.

vidaamuyarchi dubbing

சென்னை : ஒரே நாளில் ஒரு நடிகரின் படம் எப்படி வெளியாகும் என்கிற குழப்பம் தான் அஜித் ரசிகர்களுக்கு விடை தெரியாத கேள்வியாக இருந்து வருகிறது. ஏனென்றால், ஒரு பக்கம் விடாமுயற்சி தயாரிப்பு நிறுவனம் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவித்தனர். அதே போலவே, மற்றொரு பக்கம் குட் பேட் அக்லி படமும் பொங்கல் பண்டிகை அன்று தான் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இதில் குட் பேட் அக்லி படம் அறிவிக்கப்பட்ட சமயத்திலே ரிலீஸ் தேதி இது தான் என அறிவிக்கப்பட்டு விட்டது. ஆனால், விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதி டீசர் வெளியான போது தான் அறிவிக்கப்பட்டது. எனவே, அஜித் ரசிகர்கள் பலரும் குழப்பத்தில் என்னப்பா? இது ஒன்னும் புரியவில்லை என குழம்பினார்கள். அதே சமயம் AK தன்னுடைய 2 படங்களை ஒரே நாளில் ரிலீஸ் செய்து சாதனை படைக்க காத்திருக்கிறார் என்றெல்லாம் கூறினார்கள்.

ஒரு சில ரசிகர்கள் அப்படி எதிர்பார்த்தலும் அது நடக்காத ஒரு விஷயம் என்று தான் சொல்லப்படுகிறது. இரண்டில் ஒரு படம் ரிலீஸ் தேதி தள்ளி செல்ல தான் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அது எந்த திரைப்படம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வந்தால் மட்டுமே தான் தெரியவரும். இப்போது நிலவரத்தை வைத்து பார்த்தால் நிச்சயமாக குட் பேட் அக்லி படம் தான் தள்ளி செல்ல வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

ஏனென்றால், விடாமுயற்சி படத்தின் வெளிப்பாடுகளில் தொய்வில் இருந்தது டப்பிங் பணி தான் அந்த பணிகளை படத்தில் நடித்த மற்ற நடிகர்கள் பேசி முடித்த நிலையில், அஜித் பேசாமல் இருந்தார். இதனையடுத்து, இன்று அஜர்பைஜானில் உள்ள பாகுவில் விடாமுயர்ச்சி படத்திற்கு டப்பிங் பணியை பேசி முடித்துக்கொடுத்தார்.

அவர் டப்பிங் பேசி முடித்ததற்கான புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளிட்ட மேலாளர் சுரேஷ் சந்திரா படம் சொன்னபடி பொங்கலுக்கு வெளியாகும் என்பதையும் திட்டவட்டமாக அறிவித்தார். எனவே, விடாமுயற்சி பொங்கலுக்கு வருகிறது என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை…

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live rain news
school leave rain thoothukudi
tn school leave rain
gukesh dommaraju
gukesh dommaraju pm modi
gukesh dommaraju mk stalin
Chikitu Vibe