1 முறை சார்ஜ் போடுங்க 130 கிமீ போகலாம்! அதிர வைக்கும் குவாண்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!
கிராவ்டன் குவாண்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பைக்குக்கான முன்பதிவு தற்போது ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது.
டெல்லி : கிராவ்டன் குவாண்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எப்போது வெளியாகும் எனவும் எப்போது அதற்கான முன்பதிவு தொடங்கும் என சிலர் காத்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்காகவே இப்போது அட்டகாசமான செய்தி வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால், குவாண்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குவதற்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
இந்நிலையில், இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான விலை எவ்வளவு? என்னென்ன சிறப்பு அம்சங்கள் எல்லாம் என்னவென்பது பற்றி பார்ப்போம்..
சிறப்பு அம்சங்கள்
பேட்டரி : இந்த கிராவ்டன் குவாண்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 6 kWh லித்தியம்-அயன் பேட்டரி பேக் விருப்பத்தைக் கொண்டுள்ளது என்பதால் நீங்கள் ஒரு முறை சார்ஜ் செய்தால் 130 கிமீ வரை செல்லலாம். தினசரி பயன்பாட்டிற்கு இந்த பைக் மிகவும் சிறந்தது. முழுவதுமாக சார்ஜ் செய்தால் கவலையின்றி நீண்ட தூரம் பயணிக்கலாம்.
சார்ஜ் செய்ய எவ்வளவு நேரம்? : பார்ஸ்ட் சார்ஜிங் வசதியை இந்த பைக் கொண்டுள்ள காரணத்தால் நீங்கள் 0 % விதத்தில் சார்ஜ் போட்டுகொண்டாள் 3 மணி நேரத்தில் முழுவதுமாக ஏறிவிடும்.
எவ்வளவு ஸ்பீடு? : மற்ற வாகனங்களை போல வேகமாக செல்வதற்கு இந்த வண்டியை நிறுவனம் கொண்டு வரவில்லை. தினமும் வயதான பெரியவர்கள் மற்றும் மெதுவாக செல்ல நினைப்பவர்களுக்காகவே இந்த பைக் கொண்டு வரப்பட்டிருக்கிறது. ஏனென்றால், இந்த வாகனத்தின் அதிகபட்ச வேகமே 70 கிமீ தான். இந்த வேகத்தில் சென்றாலும் கூட வாகனம் இரைச்சல் சத்தம்கேட்கமால் மிகவும் -ஆக இருக்கும் என நிறுவனம் கூறுகிறார்கள்.
பாதுகாப்பு ஏற்பாடு : கிராவ்டன் குவாண்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பாதுகாப்புக்காக பல ஏற்பாடுகள் செய்ப்பட்டுள்ளது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், முன்பக்கத்தில் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக்குகள் உள்ளது. இது வேகமாக நாம் எங்கயாவது செல்கிறோம் என்றால் பிரேக் பிடித்த நொடியில் நமக்கு தேவையான க்ரிப்பை கொடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை தவிர டியூப்லெஸ் டயர்களையும் பைக் கொண்டுள்ளது. எனவே, பஞ்சரானாலும் பாதுகாப்பாக இருக்கும்.
விலை எவ்வளவு?
இவ்வளவு அட்டகாசமான அம்சங்களை கொண்டுள்ள இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை பற்றி பார்க்கையில், ரூ.1 லட்சத்து 20,000-க்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.
முன்பதிவு தொடக்கம்
இந்த கிராவ்டன் குவாண்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பைக் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பதற்கான விவரம் வெளியாகவில்லை. ஆனால், அதற்கு முன்பே முன்பதிவு தொடங்கியுள்ளது. இந்த ஸ்கூட்டரை நீங்கள் வாங்க விரும்புகிறீர்கள் என்றால் நீங்கள் குவாண்டாவின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.gravton.com/book-a-test-ride/ இணையதளத்திற்கு சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ஆனால், இன்னும் இந்தியாவில் இந்த ஸ்கூட்டர் எப்போது அறிமுகம் ஆகும்? முன்பதிவு எப்போது தொடங்கும் என எந்த தகவலும் வெளியாகவில்லை. ஹைதராபாத்தில் மட்டும் அறிமுகம் செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.