ரூபாய் 1,43,00000 பழைய நோட்டுக்கள் பறிமுதல்..!!

Default Image

பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 1.43 கோடி ரூபாய் பணத்தை அதை வைத்திருந்த மூன்று நபர்களிடமிருந்து பறிமுதல் செய்துள்ளதாக ஹரியாணா காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஹாரீஷ் பர்த்வாஜ் தெரிவிக்கையில், ”ஹரியாணா மாநிலத்தில் ஹிசார் நகரத்தின் நவ்தீப் காலனியில் போலீஸார் நேற்று இரவு ஒரு வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின்போது பழைய ஆயிரம் ரூபாய், ஐநூறு ரூபாய் நோட்டுகள் கட்டுகட்டாய் சிக்கின. இது தவிர இன்று புதுடெல்லி, ரோடக் ஆகிய இடங்களிலும் சோதனைகள் நடைபெற்றன.

Image result for கைது

புதுடெல்லி விகாஸ்புரி பகுதியில் கரிக்பால் சிங், ஹரியாணாவின் ரோடக் மாவட்டத்தில் கிரவார் கிராமத்தைச் சேர்ந்த சுனில், கோபால்புர் கிராமத்தைச் சேர்ந்த சமர் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.விசாரணையில், அவர்கள் அனைவரும் புதிய பணம் ரூ. 7.50 லட்சத்தைச் செலுத்தி நில விற்பனையாளர் ஒருவரிடமிருந்து பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ரூ.1 ஆயிரம், ரூ.500 ஆகியவற்றைப் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்