வெளியான 2 நாளில் பட்ஜெட்டை தட்டி தூக்கிய புஷ்பா 2! வசூல் எவ்வளவு தெரியுமா?
புஷ்பா 2 திரைப்படம் வெளியான 2 நாட்களில் பட்ஜெட் தொகையை மீட்டெடுத்துள்ள காரணத்தால் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
சென்னை : ஒரு படம் எப்படி வசூல் செய்யவேண்டும் என்கிற அளவுக்கு புஷ்பா 2 படம் வசூல் செய்து மற்ற படங்களில் கிளாஸ் எடுத்து வருகிறது என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால், அந்த அளவுக்கு படத்தின் வசூல் புயலை போல இந்திய சினிமாவிலே பெரிய தாக்கத்தை உண்டு செய்துள்ளது. குறிப்பாக வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.293 கோடி வரை வசூல் செய்து தென்னிந்திய சினிமாவில் முதல் நாளில் அதிகமான வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்ததது.
இதற்கு முன்பு வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையை ஆர்ஆர்ஆர் திரைப்படம் வைத்திருந்தது. ரூ.233 கோடி வசூல் செய்து படம் முதலிடத்தில் இருந்த நிலையில், அந்த படத்தையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு புஷ்பா 2 வசூல் புயலானது வரலாற்றில் புதிய சாதனையை படைத்திருக்கிறது.
அந்த வசூல் புயல் முதல் நாளில் நிற்கவில்லை. இரண்டாவது நாளிலும் அமோக வரவேற்பு கிடைத்து படத்தின் வசூல் 500 கோடியை நெருங்கியுள்ளது. வெளியான இரண்டு நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.268.7 கோடி, எனவும், உலகம் முழுவதும் ரூ.421.30 கோடி வசூலித்துள்ளது என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கண்டிப்பாக 3 நாட்களில் 500 கோடி வசூல் செய்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படம் எடுக்கப்பட்டதே 400 கோடி தான். அந்த தொகையை வெளியான 2 நாட்களிலே படம் கடந்துள்ளதால் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பு மற்றும் வசூலை வைத்து பார்க்கையில் கண்டிப்பாக படம் 1000 கோடி வசூல் செய்யவும் வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தான் பிரபல வணிக நிறுவனமான பி.வி.ஆர் லிமிடெட், அதிகாரி கௌதம் தத்தாவும் கூறுகிறார்.
சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசிய அவர் ” புஷ்பா 2 படத்திற்கு மக்கள் பெரிய ஆதரவை கொடுத்து வருகிறார்கள். இந்த அளவுக்கு வரவேற்பு கிடைப்பதால் நாங்கள் 800 கோடி முதல் 1000 கோடி படம் வசூல் செய்யும் என எதிர்பார்க்கிறோம்” எனவும் தெரிவித்தார்.