“கூட்டணி பிரஷர்., திருமாவளவன் மனது இங்கே தான் இருக்கும்” விஜய் அதிரடி பேச்சு! 

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவுக்கு கூட வர முடியாத அளவுக்கு கூட்டணி பிரஷர் திருமாவளவனுக்கு இருக்கிறது என தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார்.

TVK Leader Vijay - VCK Leader Thirumavalavan - MK Stalin

சென்னை : இன்று விகடன் பதிப்பகம் சார்பில் எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர் எனும் புத்தக வெளியிட்டு விழாவில் தவெக தலைவர் விஜய், ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு, அம்பேத்கர் பேரன் ஆனந்த் டெல்டும்டே ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பேசிய தவெக தலைவர் விஜய் அம்பேத்கர் பற்றி பெருமையுடன் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். அடுத்ததாக திமுக கூட்டணி பற்றியும், விசிக தலைவர் திருமாவளவன் பற்றியும் வெளிப்படையாக தனது கருத்துக்களை பேசினார்.

அவர் கூறுகையில்,   ” இறுமாப்புடன் 200 தொகுதிகள் வெல்வோம் என்று எகத்தாள முழக்கம் இடும் மக்கள் விரோத அரசுக்கு நான் விடும் எச்சரிக்கை. கூட்டணி கணக்குகள் அனைத்தையும் 2026-ல் மக்களே மைனஸ் ஆக்கி விடுவார்கள். அடிப்படை பிரச்னைகளை தீர்க்க மக்களை உண்மையாகவே நேசிக்கிற நல்ல அரசு உருவாக வேண்டும்.

இறுதியாக ஒரு விஷயம் சொல்லி கொள்கிறேன். விசிக தலைவர்  திருமாவளவன் அவர்களால் இங்கே வரமுடியாமல் போனது. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவுக்கு கூட வர முடியாத அளவுக்கு கூட்டணி கட்சிகளால் எவ்வளவு பிரஷர் இருக்கும் என என்னால் யூகிக்க முடிகிறது. அவர் இங்கே இல்லை என்றாலும் அவருடைய மனம் இங்கே தான் இருக்கிறது. ” என வெளிப்படையாக தனது கருத்தை கூறியுள்ளார் தவெக தலைவர் விஜய்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live rain news
tn school leave rain
gukesh dommaraju
gukesh dommaraju pm modi
gukesh dommaraju mk stalin
Chikitu Vibe
world chess champion gukesh