“குட் நைட் போய் தூங்குங்க”…ரோஹித் சர்மா பேட்டிங்கை விமர்சித்த ஆடம் கில்கிறிஸ்ட்!
ஆறு ஆண்டுகளுக்கு பிறகு மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கேப்டன் ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அடிலெய்ட் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபிக்கான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டு ஓவலில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்த போட்டியில் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆறாவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்தார்.பெர்த்தில் நடந்த தொடக்க டெஸ்ட் போட்டியின் போது அவரால் போட்டியில் கலந்துகொள்ள முடியவில்லை. ஏனென்றால், இரண்டாவது குழந்தை பிறப்பிற்காக தனது குடும்பத்துடன் இருக்க வேண்டும் என்று விளையாடவில்லை. இரண்டாவது போட்டிக்கு திரும்பினார்.
ஆறு ஆண்டுகளுக்கு பிறகு ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் மிடில் ஆர்டரில் இறங்கி விளையாடிய நிலையில், அவருக்கு இந்த முறை மிடில் ஆர்டர் ராசியாக அமையவில்லை என்றே சொல்லலாம். ஏனென்றால், ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் 23 பந்துகள் எதிர்கொண்டு வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுத்து தனது விக்கெட் இழந்து வெளியேறினார்.
மிகவும் குறைவான ரன்கள் மட்டுமே எடுத்து அவர் ஆட்டமிழந்து வெளியேறியது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. இதனையடுத்து, முன்னாள் ஆஸ்ரேலியா வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் ரோஹித் ஷர்மாவின் பேட்டிங்கை விமர்சித்து பேசியுள்ளார். தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி கொடுத்த அவர் பேசியதாவது ” ரோஹித் சர்மா இந்த போட்டியில் அசைவு கொடுக்காமல் மெதுவாக விளையாட நினைத்தார்.
அவரை சரியாக புரிந்து கொண்டு என்ன செய்தால் அவர் விக்கெட் எடுக்கமுடியும் என போலண்ட் சிறப்பாக பந்துவீசி அவருடைய விக்கெட்டை தூக்கினார். ரோஹித் கால்களுக்கு அசைவு கொடுத்து ஆடவில்லை என்பதால் சரியாக பந்துவீசி அவரை lbw போலண்ட் எடுத்தார். இந்த மாதிரி திறன் திட்டம் போலண்ட் சிறப்பாக வைத்து இருக்கிறார்.அந்த திட்டத்தை இப்போது ரோஹித் ஷர்மாவிடம் காண்பித்தார். ரோஹித் கால்கள் அதில் சிக்கியது. இப்போது ரோஹித் ஷர்மாவுக்கு நான் குட் நைட் சொல்கிறேன்” எனவும் கில்கிறிஸ்ட் கலாய்க்கும் வகையில் பேசியுள்ளார்.