சிறகடிக்க ஆசை சீரியல்.. கண் திருஷ்டி அம்மாவாகும் விஜயா..!

சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைக்கான[டிசம்பர் 6] எபிசோடில் விஜயாவின் போட்டோவால் மனோஜ்க்கு வந்த அடுத்தடுத்த குட் நியூஸ்..

MUTHU (11) (1) (1)

சென்னை :சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைக்கான[டிசம்பர் 6] எபிசோடில் விஜயாவின் போட்டோவால் மனோஜ்க்கு வந்த அடுத்தடுத்த குட் நியூஸ்..

வீட்டிற்கு வரும் விஜயாவின் கண்திருஷ்டி போட்டோ ;

முத்து செல்வத்து கிட்ட ரோகிணி பத்தி  சொல்லிட்டு இருக்காங்க.. அந்த பார்லர் அம்மா ஏதோ ஒரு கேடி வேலை பாக்குது  அதை எப்படியாவது கண்டுபிடிக்கணும் டா அப்படின்னு சொல்றாங்க .அந்த டைம்ல மீனாவ ஃபாலோ பண்றவரு வராரு ..  என்னடா உன் லவர் கிட்ட பேசிட்டியா அப்படின்னு கேட்க அதுக்கு அவர் சொல்றாரு அண்ணே அந்த பொண்ண அன்னைக்கே பார்த்து சாரி சொல்லிட்டேன் .அதுக்கு அப்புறம் பேசுறதுக்கு ரொம்ப பயமா இருக்குது.. என்னடா இப்படி பயந்துட்டே இருந்தா எப்படிடா லவ் செட் ஆகும்னு முத்து சொல்றாரு. இப்போ மனோஜ் விஜயா கிட்ட கண் திருஷ்டி போட்டோவ காட்டிட்டு இருக்காரு. விஜயா அதிர்ச்சியா பார்த்துட்டே நிக்கிறாங்க. உங்க போட்டோவ ஒருத்தன் கூவி வித்து விட்டிருந்தான் நான் மொத்தமா எல்லா போட்டோவும் வாங்கிட்டு வந்துட்டேன் அம்மா.

எவன்டா என்ன இப்படி பண்ணது அப்படின்னு கேட்க அதுக்கு ரோகிணி சொல்றாங்க தெரியல ஆண்ட்டி ..நார்த் இந்தியாவுல ஏற்கனவே நல்லா சேல் ஆகுதுன்னு சொன்னாரு.. விஜயா ஃபோட்டோவை தூக்கி வீசறாங்க.. அந்த டைம்ல அண்ணாமலை வராரு.. ஏன் இந்த போட்டோவை தூக்கி வீசுரன்னு கேட்டுகிட்டே கையில போட்டோ எடுத்து பாக்குறாரு .. விஜயவா இது அப்படின்னு விஜயா பக்கத்துல வச்சு போட்டோவையும் விஜயாவையும் மாறி மாறி பார்த்து சிரிக்கிறாரு. இத பார்த்த ஸ்ருதியும் மீனாவும் சிரிக்கிறாங்க .ஆனா விஜயா மீனாவ  மட்டும்  திட்டுறாங்க.. எல்லாம் உன்னால தாண்டி..இப்ப ஸ்ருதி சொல்றாங்க.. இல்ல நான் தான் ஆன்ட்டி பண்ணுனே அவங்கள ஏன் திட்றீங்க. நான் தான் சோசியல் மீடியாவில்  அப்லோட் பண்ண ஆனா இப்படி எல்லாம் நடக்கும்னு  எனக்கு எப்படி தெரியும் அப்படின்னு சொல்றாங்க..

MANOJ,ROHINI (10) (1)

மனோஜை தேடி வரும் அதிஷ்டம் ;

இப்ப மனோஜ் அம்மா இந்த போட்டோவை நான் கடையில மாட்ட வா என்னன்னு கேக்குறாங்க.. விஜயா கோபத்துல கத்துறாங்க.. மனோஜ் ஷோரூம் வராரு  அங்க விஜயா போட்டோ மாட்டிருக்கு  அத  பார்த்துட்டு யார் இத இங்க மாட்டினது உடனே எடுங்க அப்படின்னு கத்துறாரு ..இப்ப அந்த டைம்ல சந்தோஷி  சார்  கால் பண்றாரு.. அட்டென்ட் பண்ணி பேசுறாரு ..அதுக்கு அப்புறம் ரோகினி கிட்ட ரோகிணி சந்தோஷி சார் பத்து லட்சம் ப்ராபிட்  நமக்கு அக்கவுண்ட்ல போட்டு இருக்கிறார்னு  சொல்லி சந்தோஷப்படுறாங்க ..எல்லாமே இந்த போட்டோவால தான் இருக்கும் அப்படின்னு நினைக்கிறாரு .. மனோஜ்  பார்க் பிரிண்ட் வந்துட்டாரு.. ப்ரோ இன்னைக்கு பார்க்கல ஒருத்தரை பார்த்தேன்.. அவரு  மூணு கோடில  ஒரு பங்களா  விக்கிறேன்னு சொல்லி இருக்காங்க .நீ வாங்கிக்கோ புரோ அப்படின்னு சொல்றாங்க.

மனோஜ் உடனே அவ்வளவு பெரிய அமௌன்ட் எல்லாம் என்கிட்ட இல்ல ஃபர்ஸ்ட் நீ அந்த வீட பாரு புரோ.. போட்டோ காட்ட மனோஜ்க்கு ஆசை வந்துடுது ..ரோகிணியும் பர்ஸ்ட் போய் அந்த வீட்டை நம்ம பார்க்கலாம் அப்படின்னு சொல்றாங்க . என்ன இன்னைக்கு குட் நியூசா வருது .. கண்டிப்பா இதெல்லாம் அம்மா போட்டோவால  தான்..  மறுபடியும் விஜயாவோட கண் திருஷ்டி போட்டோ எடுத்து மாட்டி சாமி எல்லாம் கும்பிடுகிறாரு  .இதோட இன்னைக்கு  எபிசோட முடிச்சிருக்காங்க .நாளைக்கு ப்ரோமோல மீனவ ஃபாலோ பண்றவரு மீனா வீட்டுக்கே வந்துடறாங்க.. அங்க வந்து அண்ணே நான் லவ் பண்ற பொண்ணு இந்த பொண்ணு தான் அப்படின்னு முத்துக்கிட்ட  சொல்ல முத்து அதிர்ச்சியா நிக்கிறாரு..

இப்போ அண்ணாமலை கிட்ட அங்கிள் இந்த பொண்ண நான் லவ் பண்றேன் உங்களோட சம்மதத்தை சொல்லுங்கன்னு சொல்ல அதுக்கு அண்ணாமலை சொல்றாரு இது நான் எடுக்க வேண்டிய முடிவு இல்ல முத்து தான் எடுக்கணும் அப்படின்னு  சொல்ல அவர் அதுக்கு இந்த ஐடியா கொடுத்ததே முத்து அண்ணன் தானே.. அப்படின்னு சொன்னதும் மீனா முத்துவ முறைக்கிறாங்க..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்