இனிமேல் வடிவேலு பற்றி பேசக்கூடாது! சிங்கமுத்துக்கு தடை போட்ட நீதிமன்றம்!
வடிவேலுவுக்கு அவதூறு ஏற்படுத்தும் எந்த கருத்தும் தெரிவிக்க மாட்டேன் என உத்தரவாத மனு தாக்கல் செய்ய நடிகர் சிங்கமுத்துவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை : தன்னைப்பற்றி சிங்கமுத்து அவதூறு பரப்புவதாக சிங்கமுத்து பேசுவதாக கூறி அவர் மீது சென்னை உயர்நிதி மன்றத்தில் வடிவேலு ரூ.5 கோடி கேட்டு மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், இனிமேல் இது போன்று வடிவேலு பற்றி பேசக்கூடாது என சென்னைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவதூறு பேச்சு
ஆரம்பக் காலத்தில் நடிகர் வடிவேலு மற்றும் நடிகர் சிங்கமுத்து இருவரும் நெருக்கமாக பழகி வந்த நிலையில், ஒரு கட்டத்திற்கு மேல் இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. எனவே, இதன் காரணமாக இருவரும் படங்களில் இணைந்து நடிப்பதை கூட முற்றிலும் நிறுத்திவிட்டார்கள். ஆனால், இருவருக்கும் இடையே பிரச்சினை என வெளியே தெரிய காரணமே சிங்கமுத்து பல பேட்டிகளில் கலந்து கொண்டு வடிவேலு குறித்து அவதூறாக பேசியது தான்.
குறிப்பாக ஒரு பேட்டியில் கூட ” பொதுவாகவே வடிவேலு ஒரு படத்தில் தன்னுடன் நடித்து யாராவது ஒருவர் பிரபலமான நடிகர் ஆகிவிட்டார்கள் அவர்களுக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தது என்றால் அவர்களை அழித்துவிடுவார்.தன்னைவிடச் சிறப்பாக நடிக்கிறார் எனப் பெயர் எடுத்து விட்டால் அவர்களைப் பற்றி பொதுவெளியில் நம்பும் வகையில் பொய் சொல்லி அவர்கள் மீது கலங்கத்தை ஏற்படுத்திவிடுவார்” எனவும் பேசியிருந்தார்.
வடிவேலு வழக்கு
சிங்கமுத்து இப்படி பேசிக்கொண்டிருந்த காரணத்தால் வடிவேலு மீது அந்த சமயங்களில் விமர்சனங்களும் எழுந்தது. இதனையடுத்து, இந்த பிரச்சினையை சும்மாக விட்டால் சரியாக இருக்காது என முடிவெடுத்து சிங்கமுத்து தன்னைப்பற்றிக் கொடுத்த பேட்டியில், பல பொய்களைக் கூறியது மட்டுமின்றி தன்னை தரக்குறைவாகப் பேசி உள்ளார் என சென்னை உயர்நீதி மன்றத்தில் ரூ.5 கோடி மானநஷ்ட ஈடு கேட்டு, வழக்கு தொடர்ந்தார்.
உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு
வடிவேலு தொடர்ந்த இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இனிமேல் நடிகர் வடிவேலுவுக்கு அவதூறு ஏற்படுத்தும் எந்த கருத்தும் தெரிவிக்க கூடாது என சிங்கமுத்துவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கை தாக்கல் செய்த பிறகும், சிங்கமுத்து தொடர்ந்து அவதூறு பரப்புகிறார் என வடிவேலு தரப்பு வாதம் செய்த நிலையில், பேட்டி வீடியோக்களை நீக்கும்படி சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல்களுக்கு கடிதம் அனுப்பவும், வடிவேலுவுக்கு அவதூறு ஏற்படுத்தும் எந்த கருத்தும் தெரிவிக்க மாட்டேன் என உத்தரவாத மனு தாக்கல் செய்யவும் சிங்கமுத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.