செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் – இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவிப்பு!
புரோபா 3 செயற்கைக்கோள்கள் சரியான புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
ஆந்திரப் பிரதேசம் : ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி C-59 ராக்கெட் இன்று மாலை 4:06 மணிக்கு ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் புரோபா-3, கரோனா கிராப் ஆகிய செயற்கைக்கோள்கள் சுமந்துகொண்டு PSLV-C59 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது.
சூரியனின் வளிமண்டலம் குறித்து ஆய்வு செய்ய , ப்ரோபா செயற்கைக்கோளை சுமந்து கொண்டு இஸ்ரோவின் PSLV-C59 ராக்கெட் விண்ணில் பாய்நதிருக்கிறது. இதனையடுத்து, செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
விண்ணில் ராக்கெட் பாய்ந்த பிறகு பேட்டி கொடுத்த அவர் ” செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. சூரியனின் ஒளி வட்டப் பாதையை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட புரோபா 3 செயற்கைக்கோள்கள் சரியான புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இதன் மூலம், இந்தியாவின் 61ஆவது பிஎஸ்எல்வி திட்டம் வெற்றி பெற்றது என்பதை மகிழ்ச்சியாக தெரிவித்துக்கொள்கிறேன்.
புரோபா 3 திட்டத்தில் மொத்தமாக இரண்டு செயற்கைக்கோள்கள் இடம்பெற்றுள்ளன.புரோபா – 3 செயற்கைக்கோள்கள் 150 மீ. இடைவெளியில் அருகருகே பயணித்து சூரியனின் புறவெளிப்
பகுதியை ஆய்வு செய்ய உள்ள்ளது” எனவும் நெகிழ்ச்சியாக தெரிவித்தார்.
மேலும், விண்ணில் ராக்கெட் பாய்வதற்கு முன்னதாக பி.எஸ்.எல்.வி.சி 59 விண்கலத்தின் பயணம் வெற்றி அடைய வேண்டி சூலூர்பேட்டை செங்காளம்மன் கோவிலில் இஸ்ரோ விஞ்ஞானி மற்றும் தலைவரான சோம்நாத் வழிபாடு செய்திருந்தார். இப்போது திட்டம் வெற்றிபெற்றுள்ளதால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.