மன்சூர் அலிகான் மகன் கஞ்சா பயன்படுத்தியது உறுதி – மருத்துவ அறிக்கை!
போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைதான நடிகர் மன்சூர் அலிகான் மகன் துக்ளக் அலிகான், கஞ்சா பயன்படுத்தியது உறுதியாகியுள்ளது
சென்னை: மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக் உள்ளிட்ட 7 பேரை 15 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்க அம்பத்தூர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கஞ்சா, மெத்தபெட்டமைன் போதைப் பொருள்களை கடத்தி வந்து சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ததாக சமீபத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களின் செல்போனை ஆய்வு செய்ததில், துக்ளக் உள்ளிட்ட 4 பேர் தொடர்பில் இருந்தது தெரியவந்ததால், அவரை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த நிலையில், இன்று மன்சூர் அலிகான் மகன் உண்மையிலே கஞ்சா பயன்படுத்தினாரா? இல்லையா என்று மருத்துவ பரிசோதனை செய்தனர்.
இறுதியில் பரிசோதனையில் கஞ்சா பயன்படுத்தியது மருத்துவ பரிசோதனையில் அம்பலமாகியுள்ளது. இதனிடையே, மன்சூர் அலிகான், போதைப்பொருள் வழக்கில் ஏற்கெனவே கைதானவர்களின் செல்போனில், தனது மகனின் எண் இருந்ததால் அவரை கைது செய்துள்ளதாக நேற்று பேட்டி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.