ரிங்கு சிங்கா? சுனில் நரைனா? யாருக்கு கொடுக்கலாம்! குழப்பத்தில் கொல்கத்தா அணி!
கொல்கத்தா அணி அடுத்த ஆண்டுக்கான கேப்டன் யார் என்பதை விரைவில் அறிவிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொல்கத்தா : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியை யார் கேப்டனாக வழிநடத்த போகிறார் என்ற கேள்வி தான் விடை தெரியாமல் இருக்கும் முக்கிய கேள்வி. ஏனென்றால், கடந்த ஆண்டு அணிக்காக கேப்டனாக விளையாடிய ஷ்ரேயஸ் ஐயர் இந்த முறை தன்னை தக்கவைக்கவேண்டாம் என கூறி விலகினார். இதன் காரணமாக அடுத்ததாக யாரை கேப்டனாக தேர்வு செய்யலாம் என்ற குழப்பத்தில் கொல்கத்தா அணி இருப்பதாக சொல்லப்படுகிறது.
ஒரு பக்கம் அணிக்கு சிறப்பாக விளையாடி வரும் ரிங்கு சிங்கை அணி தலைவராக நியமனம் செய்யலாமா? அல்லது கொல்கத்தா அணிக்கு பல ஆண்டுகளாக விளையாடி வரும் அனுபவம் வாய்ந்த சுனில் சுனில் நரைனை நியமிக்கலாமா? என யோசித்து வருகிறது.
ரிங்கு சிங் நியமிக்கப்பட காரணம்
ரிங்கு சிங்கை கேப்டனாக நியமிக்க காரணங்கள் என்னவென்றால் அவர் வளர்ந்து வரும் ஒரு இளம் வீரராக இருக்கிறார். அதைபோல, சையத் முஷ்டாக் அலி டிராபி தொடரிலும் ரிங்கு சிங் இப்போது அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி வருவதால் அவருக்கு கேப்டனாக வாய்ப்பு கொடுத்து எப்படி செயல்படுகிறார் என்பதை பார்க்க அணி நிர்வாகம் ஆசைப்படுவதாக கூறப்படுகிறது.
சுனில் நரைன் நியமிக்கப்பட காரணம்
சுனில் நரைன் பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் இல்லை. அவர் ஒரு சிறந்த பந்துவீச்சாளர் என்பதை தாண்டி அனுபவம் வாய்ந்த ஒரு வீரர். எனவே, எந்த எந்த சூழ்நிலைக்கு எப்படி எப்படி அணியை வழிநடத்தலாம் என அவருக்கு நன்றாகவே தெரியும். அது மட்டுமின்றி, கொல்கத்தா அணியில் சில முறை கேப்டனாகவும் சில போட்டிகளில் விளையாடிய அனுபவம் இருக்கிறது. எனவே அவருக்கும் கேப்டன் பொறுப்பை கொடுக்கலாமா? என நிர்வாகம் யோசித்து வருகிறது. கேப்டன் யார் என்பதை தேர்வு செய்த பிறகு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.